dailyvideo


யாசர் அரபாத் கொல்லப்பட்டாரா? வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்


பாலஸ்தீனத் தலைவர் யாஸர் அரபாத் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.



பாலஸ்தீனத் தலைவராக இருந்தவர் யாஸர் அரபாத். இவர் 2004 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் மருத்துவமனை ஒன்றில் மரணம் அடைந்தார். அவர் இறந்தவுடன் அவர் கொல்லப்பட்டிருக்க கூடும் என பலர் சந்தேகித்தனர. ஆனால் பாலஸ்தீன அரசு வெளியிட்ட அறிக்கையில் அவர் இயற்கை மரணம் அடைந்ததாக தெரிவித்ததையடுத்து அந்த சந்தேகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

ஆனால் அந்த முற்றுப்புள்ளி தற்போது மறுபடியும் கமா வாகி உள்ளது. சுவிட்சர்லாந்து கதிரியியக்க நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் அரபாத்தின் உடலில் பொலோனியம் என்ற விஷத்தன்மை வாய்ந்த கதிரியக்க பொருள் இருந்ததாக லாசானில் உள்ள கதிரியியக்க மையத்தின் டாக்டர் பிரான்காய்ஸ் பொகுத் தெரிவித்துள்ளார். ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் நடைபெற்ற ஆராய்ச்சிக்கு பிறகு இது தெரிய வந்துள்ளதாக அல் ஜஸீரா ஊடகம் தெரிவித்துள்ளது.

அவருடைய ஆடைகள், பிரஷ் ஆகியவற்றில் இந்த கதிரியக்கப் பொருள் அதிகளவில் இருந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடைய உடலை வெளியில் எடுத்து ஆய்வு செய்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என யாசர் அரபாத்தின் மனைவி சுஹா தெரிவித்துள்ளார். அவருடைய எலும்புகளில் பொலோனியம் அதிகளவில் கலந்திருந்தால் அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருப்பது ஊர்ஜிதமாகும்.

0 comments for யாசர் அரபாத் கொல்லப்பட்டாரா? வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

கருத்துரையிடுக

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505