dailyvideo


ஆக்கிரமித்த பலஸ்தீன் நிலத்தில் இராணுவத் தளம் அமைக்கும் திட்டம்


அல் ஹலீல்: கடந்த புதன்கிழமை (04.07.2012) அல் ஹலீல் பிராந்தியத்தின் தஹேரிய்யா கிராமவாசிகளுக்குச் சொந்தமான நிலப்பரப்பில்
இராணுவத்தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அறிவித்துள்ளது.

பலவந்தமாய் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் மக்களுக்குச் சொந்தமான 2.5 தூனம் (1தூனம் = 1000 சதுர கிலோமீற்றர்கள்) நிலப்பரப்பில் மேற்படி இராணுவத் தளம் அமைக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அப்துல்லாஹ் ஹன்டாஷ் தெரிவித்துள்ளார்.

"தஹேரிய்யா - ரமாதின் பாதைகள் சந்திக்கும் இப்பிரதேசத்தில் ஓர் இராணுவத்தளத்தை அமைப்பதன் மூலம், இப்பாதைகளின் வாகனப் போக்குவரத்தைத் தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்தி, மேற்குக்கரைப் பிராந்தியம் முழுவதையும் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் கருதுகின்றது" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments for ஆக்கிரமித்த பலஸ்தீன் நிலத்தில் இராணுவத் தளம் அமைக்கும் திட்டம்

கருத்துரையிடுக

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505