dailyvideo


சிறை அனுபவம்

ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்களுடன் ஒரு சிறை அனுபவம்

“நான் பலஸ்தீன நாட்டவன். குழந்தைப் பருவம் முதல் இந்தப் புனித பூமியில் நடைபயின்றவன் நான். இந்த மண்ணிலேயே வீர மரணமடைந்து (ஷஹீதாகி) இங்கேயே அடக்கம் செய்யப்பட வேண்டுமென்று எப்பொழுதும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் மனதுதான் என்னுடையது. இந்த உலகத்தில் நீங்கள் சுவர்க்கமாகக் கருதும் எப்பகுதிக்கு அழைத்துக் கொண்டு சென்றாலும் நான் எனது சமூகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாரில்லை. உங்களால் நரகமாக்கப்பட்ட இந்தப் பூமிதான் எனக்கு, உங்களது சுவர்க்க பூமியைவிட மிகவும் விருப்பத்திற்குரியது.”…….

உடலைப் பலவீனப்படுத்தும் நோய்களையும் யூத வெஞ்சிறையில் கொடிய சித்திரவதைகளையும் பொருட்படுத்தாமல் பிறந்த மண்ணிற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் உயிர் நாடியாகத் திகழ்ந்த அஹ்மத் யாஸீன் அவர்களுடன் சிறையில் ஐந்து மாதங்கள் உடனிருந்து சேவை புரிந்த சிறைத்தோழர் முஹ்ஸின் அபூ அய்துவா அவர்கள் அந்த வீரத்தியாகி மரணமடைந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவருடனான சிறை அனுபவ நினைவலைகளை பத்திரிகை உல கோடு பகிர்ந்துகொள்கிறார்.

பதற்றப்படாத உள்ளமும் வார்த் தைகளால் விபரிக்க முடியாத துணிவும் கொண்ட ஒரு மாமனிதரின் முன்னால் நிற்கிறேன் என்ற எண்ணம் எனக்கு பல முறை ஏற்பட்டதுண்டு. உடல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தா லும் அவருடைய சிந்தனைகளுக்கோ அறிவுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்பட வில்லை. தெளிவான சிந்தனைகளும் சீரிய பார்வையும் அவரை பிற தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. இஸ்லரேலியக் கொடூரங்கள் அக்கிரமமான ஏகாதிபத்திய ஆசைகள் ஆகியவற்றின் அஸ்திவாரத்தை தகர்த் தெறிவதுதான் அவருடைய உறுதியான சிந்தனையாக இருந்தது. இதுதான் அவரை பிற தலைவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தியது.

இதுவரை கண்டிராத இடையாராத போராட்ட வீரியம் கொண்ட உருக்கு மனிதராக ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்கள் திகழ்ந்தாலும் ஒரு மலரின் தூய்மையைப் போன்றவர் அவர். அதிசயிக்கத்தக்க குணநலன்களைக் கொண்ட அந்த மனிதரையும் தங்களுக்கேற்பட்ட அவமதிப்பிற்கு (பலஸ்தீன் பூமியை இஸ்ரேல் அபகரித்தது) செங்குருதியால் பதிலளிக்கும் அவர்களு டைய தோழர்களையும் பற்றி வார்த்தைகளால் விபரிப்பது எங்களது மொழி யில் முடியாத ஒன்று. ஆனாலும் முன்னோர்களைப் பற்றிய நினைவலை களை அவர்களைப் பின்தொடர்வோர் தங்களது நாவின் மூலம் உயிர்ப்பிப்பது அவர்களுக்கு செய்யும் செஞ்சோற்றுக் கடனாகும்.

* தங்களுடைய கட்டுரைகளில் வார்த்தைகளால் விபரிக்க முடியாத துணிவு கொண்ட ஒரு மாமனிதர் என்று ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்களை நீங் கள் குறிப்பிடுகிறீர்கள். உங்களது ஐந்து மாத சிறை வாழ்க்கையில் இத்தகைய உவமையைப் போன்று ஏதேனும் நிகழ்வுகளை அவரிடம் கண்டீர்களா?

இது சம்பந்தமாக நான் கூற விரும்புவது என்னவென்றால் ஷெய்க் அஹ் மத் யாஸீன் அவர்களைப் பற்றி அவர் களுடைய ஆதரவாளர்களும் நண்பர் களும் கூறுவதைவிட அவர்களின் எதிரிகள் கூட ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர் களின் நெஞ்சுறுதியையும் அவர்கள் தாம் கொண்ட இலட்சியத்தில்- வார்த்தை களால் விபரிக்க முடியாத உறுதியையும் அங்கீகரித்தார்கள். இது சம்பந்தமாக அவர்களுடனான இரண்டு அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கி றேன்.

நானும் ஷெய்க் அவர்களும் செய்த குற்றத்தின் விசாரணை நாடகத்திற்குப் பின் நாங்கள் இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்படவேண்டுமென்ற தீர்ப்பை நான் அறிந்தேன். ஷெய்க் அவர்களின் அருகாமை எனக்கு மகிழ்ச் சியை ஏற்படுத்தியது. ஆனாலும் நோயா ளியான ஒரு மனிதருக்கு சிறைத் தண்டனை அளித்ததை அறிந்து நான் நிலைகுலைந்தேன், சிறைஅதிகாரி யோடு நான் வாதிட்டேன்.

“வயோதிபரான ஒரு நிரபராதியை சிறையில் அடைக்கும் அளவுக்கும் மனி தத் தன்மை இழந்தவரா நீங்கள்?” என்று நான் கேட்டபோது அந்த நபர் இவ் வாறு பதிலளித்தார். “உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து நடக்கக் கூட இய லாத இந்த மனிதரை இனியும் சிறையில் அடைத்து எங்களுக்கு என்ன பயன்? நாங்கள் அவருடைய மூளையையும் கேடுகெட்ட அறிவையும் தான் சிறைவைக்கிறோம்”.

ஷெய்க் அவர்களை உடல்ரீதியாக சித்திரவதை செய்வதைக் கண்டு பொருக்க இயலாத நான் அந்த சிறை அதிகாரியிடம் கேட்டேன், “எதற்காக அந்த நோயா ளியான மனிதரை துன் புறுத்துகிறீர்கள். ஒரு ஊனமுற்றவரை அடித்து துன்பு றுத்துவதன் மூலம் உங்கள் வீரத்தை வெளிப்படுத்துகின்றீர்களா?” என்று. அதற்கு அந்த சிறை அதிகாரி கூறினான், “யார் கூறினார் இவர் நோயாளி என்று. அவருடைய தலையும் மூளையும் ஆரோக்கியமாக வல்லவா இருக் கின்றது” என்று.

சுருக்கமாகக் கூறினால் தான் கொண்ட இலட்சியத்திற்காக எந்த எல்லை வரை செல்லவும் எத்தகைய சித்திரவதைகளையும் தாங்கவும் உறுதிபடைத்த ஷெய்க் அவர்களின் தியாக மனநிலையை எதிரிகள்கூட அங்கீக ரித்தார்கள் என்பதுதான்.

* ஏதேனும் காரியங்களுக்காக ஷெய்க் அவர்களை எதிரிகள், பயமு றுத்தல், சித்திரவதை செய்தல் போன்ற தந்திரங்களைப் பயன்படுத் தியதை உங்களால் நினைவுகூற இயலுமா?

முடியும் என்பது மட்டுமல்ல. ஒன்றிற்கு மேற்பட்ட தடவை சிறை உயரதிகாரி களின் விலை குறைந்த மிரட்டல் தந்திரங்களையும் கேடு கெட்ட ஆசை வார்த்தைகளையும் ஷெய்க் அவர்கள் சந்தித்ததுண்டு. ஹமாஸ் போராளிகள் கடத்திச் சென்ற ஈலாத் ஸெய்பூன் என்ற இஸ்ரேலிய இராணுவ வீரனைப் பற்றிய விபரமளிக்க வேண்டி சிறை அதிகாரிகள் ஷெய்க் அவர்களை நிர்ப்பந் தப்படுத்தினார்கள்.

ஷெய்க் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டில் சிறிது மாற்றம் ஏற்படுத்துமா றும் அவ்வாறு செய்தால் உலகத்தில் அவர் விரும்பும் எந்தப் பகுதியிலும் சுகபோகமாக வாழ்வதற்கு ஏற்ற வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் காட்டினர். ஆனால், எவராலும் அழிக்க இயலாத மன உறுதியுடன் பளிச்சிடும் உறுதியான வார்த்தைகளால் ஷெய்க் அவர்கள் அளித்த பதில் ஒவ்வொரு பலஸ்தீன சகோதரனும் மன தில் பூட்டிப் பாது காக்க வேண்டியவை.

“நான் பலஸ்தீன நாட்டவன். குழந்தைப் பருவம் முதல் இந்தப் புனித பூமியில் நடைபயின்றவன் நான். இந்த மண்ணிலேயே வீர மரணமடைந்து (ஷஹீதாகி) இங்கேயே அடக்கம் செய்யப்படவேண்டுமென்று எப்பொழுதும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் மனதுதான் என்னுடையது. இந்த உலகத்தில் நீங்கள் சுவர்க்க மாகக் கருதும் எப்பகுதிக்கு அழைத்துக் கொண்டு சென்றாலும் நான் எனது சமூகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாரில்லை. உங்களால் நரகமாக்கப்பட்ட இந்தப் பூமிதான் எனக்கு, உங்களது சுவர்க்க பூமியைவிட மிகவும் விருப்பத் திற் குரியது.

சிறைக்கு வெளியேயுள்ள ஓர் அனுபவத்தைக் கூறுகிறேன். சில அமெரிக்க அறபு தலைவர்கள் இஸ்ரேல் உலவுத் துறை வட்டாரங்களின் சதித்திட்டங் களைப் பற்றிய இரகசியத் தகவலை அளித்தார்கள். ஷெய்க் அவர்கள் அமெ ரிக்காவின் உதவிக்கு இவ்வாறு பதில ளித்தார்கள்: “எவரும் எனக்காக வருந்த வேண்டிய தேவையில்லை. தற்காப் புப் போரைப் பற்றிய பூரண அறி வோடுதான் நாங்கள் இந்தப் பணியை ஏற்று செயல்படுத்தத் துவங்கியிருக் கிறோம். நாங்கள் இப்பணியைத் துவக் கிவைத்தது சொந்த நாட்டிற்காக இரத்த சாட்சிகளாக மாறத்தான்”.

தொடர்ந்து அவர் கூறிய வார்த்தைகள் யூத ஸியோனிஸ்டுகளின் காதுகளில் இடிமுழக்கமாக இறங்கக் கூடியவை. பலஸ்தீனிலுள்ள பிஞ்சுக் குழந்தைக ளின் குருதியா உங்கள் வயிற்றுக்கு விருப்பமானது? என்னை மட்டும் எதற் காக இந்தப் பூவுலகில் மீதம் வைத்துள்ளீர்கள்? பிறக்கும் பொழுதே கஷ்டங் களைத் தாங்குவதற்கு விதிக்கப்பட் அந்தக் குழந்தைகளின் ஆன்மா வைக் காட்டிலும் என்னுடைய ஆன்மாவிற்கு மதிப்பொன்றுமில்லை.

நீங்கள் என்னைத்தான் கொல்ல முயல்கின்றீர்கள் என்றால் அதற்காக நீங்கள் சிரமப்படத் தேவையில்லை. உங்கள் இலக்கு நானென்றால் அது ஒருபோதும் தவறாது. என்னுடைய ஒவ்வொரு நகர்வும் எல்லோரும் அறி யும் விதமாகப் பகிரங்கமானது. உங்களுடைய கரங்களால் கொல்லப்பட வேண்டும் என்பதே எனது இறுதி இலட்சியம்.

நாங்கள் நெஞ்சுறுதியின் உடன் பிறப்புக்கள். போராட்டத்தின் தீப் பிழம்புகள் சிதறும் தலைமுறையின் உற்ற நண்பர்கள். தன்மானத்தின் பாதுகாப்பிற்கா கத்தான் போர் செய்யும் உறுதி பூண்டிருக்கிறோம் என்று அமெ ரிக்க அறபு லகத்தோடு கூறுங்கள்.

* தன்னைப் பீடித்திருக்கும் நோய்களோடு ஷெய்க் அவர்கள் எவ்வாறு சிறைக் கொட்டகையில் மன ரீதியான, உடல் ரீதியான சித்திர வதைகளை எதிர் கொண்டார்கள்?

உண்மையில் என்னவென்றால் ஒருநாள் கூட ஷெய்க் அவர்கள் தனக்கு ஏற் படும் சிரமங்கள் குறித்து குறைபட்டுக் கொள்ள மாட்டார்கள். தன்னைப் பின் தொடரும் நோய்களுடனேயே எப்பொழுதும் உதட்டில் புன்சிரிப் போடும் இருப்பார்கள். வெறுப்பு அல்லது பொறுக்க இயலாத தன்மையின் ஒரு அம்சம்கூட அவர்களின் ஜொலிக்கும் முகத்திலோ அல்லது அமைதியான வார்த்தைகளிலோ வெளிப்படாது.

அலை அடங்கிய கடல் போன்ற உள்ளமும், சாந்த கம்பீர முகமும்தான் அவர் களுடைய அடையாளம். உதடுகள் எப்பொழுதும் பிரார்த்தனையிலேயே இருக்கும். அல்குர்ஆன் தான் அவர்களுடைய மொழி. அதன் காரணமாகத் தானோ என்னவோ அவருடைய மார்க்க-அரசியல் நிலைப்பாடுகளில் ஒரு போதும் பிழைகள் நிகழாதது. அதேபோலவே அவர் சோதனைகளை உறுதி யோடு எதிர்கொண்டதும் என்று என்னால் கூற இயலும்.

ஜமாஅத்தாக தொழுவதற்குக் கூட இயலாத ஒரு குறுகிய இடத்தில்தான் நானும் ஷெய்க் அவர்களும் இன்னொரு சகோதரரும் அடைக்கப்பட்டிருந் தோம். வடக்கு பலஸ்தீனில் ஒரு மறைவான தரக்குறைவான சிறைக் கூட மாக இருந்தது அது. உடம்புகளிலுள்ள எழும்புகளைக்கூட துளைக்கும் கடும் குளிர் நிலவும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் போர்த்துவதற்கு ஒரு போர்வைகூட இல்லாமல் அந்த நோயாளியான வயோதிப மனிதர் கழித்தது, ஐந்து மாதங்கள். ஒலிவ் மரங்கள்கூட குளிர்ந்து விறைத்துப் போய் நிற்கும் அந்தத் துன்புறுத்தும் இரவுகளில் கதவுகள்கூட இல்லாத இரும்பு ஜன்னல் களைக் கொண்ட அந்தக் குறுகிய அறையில் தங்குவதற்கு நேர்ந்த பிறகும் ஷெய்க் அவர்கள் எந்தக் குறைகளையும் முறையிடத் தயாரானதில்லை.

அதுமட்டுமல்ல, அந்தச் சிறையில் எங்கள் மூன்றுபேரைத் தவிர மற்ற அனை வருக்கும் போர்வை வழங்கப்பட்டது. ஏனெனில் அவர்கள் யூதர்கள். இதுபற்றி நான் ஷெய்க் அவர்களிடம் “பிற சிறைக்கைதிகளுக்கு போர்வை வழங்கப்பட் டுள்ளது, நமக்கு வழங்கப்படவில்லை. இதனைக் கேட்பது நமது உரிமையல் லவா? என்று கேட்டேன். அதற்கு ஷெய்க் அவர்கள் அளித்த பதில், நாம் வசிப் பது சிறைக் கூடத்தில், நட்சத்திர ஹோட்டலிலல்ல.

இன்னொரு சூழலில் சிறைக் கைதிகளிடம் காட்டுமிராண்டித்தனமான முறை யில் நடந்துகொள்ளும் ஸியோனிஸ்டுகளின் மறுக்கும் நட வடிக்கைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு ஷெய்க் அவர்களிடம் ஒப்புதல் கேட்ட பொழுது ஷெய்க் அவர்கள் கூறினார்கள், “நாம் இருப்பது சிறைக்கூடத்தில். மனிதத் தன்மையை இழந்துவிட்ட எதிரிகளிடம் உரிமை யைக் கோருவது என்பது முட்டாள்த்தனம் என்பதைத் தவிர வேறு என்ன? நீங்கள் உண்ணாவிரதம் இருந்துகொள்ளுங்கள். அதில் நான் கலந்துகொள்ள மாட்டேன்” என்று.

* விசாரணைகளை ஷெய்க் அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்?

விசாரணையின்போது ஷெய்க் அவர்களைப் பின்தொடர எங்களுக்கு அனுமதி யில்லாததால் விசாரணைக் கூண்டில் ஷெய்க் அவர்களின் பதில் எவ்வாறு இருந்தது என்பதை அறிய எங்களால் இயலாதுபோனது. ஆனாலும் விசார ணைக்கு முந்திய இரவில் ஷெய்க் அவர்கள் பூரணமாக விசாரணைக்குத் தயாராவார்கள். தன்மானம் ஜொலிக்கும் முகத்தைக் கொண்டவர்களாக ஷெய்க் அவர்கள் அவ்வேளை களில் திகழ்வார்கள்.

கடினமான மூலநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அதிகமான இரத்தம் வெளி யாகும். மேலும் பொறுக்க இயலாத வேதனையும் அவர்களுக்கு ஏற்படும். இதனால் அவர்கள் சில மாத்திரைகளை உட்கொண்ட பிறகே விசாரணையை சந்திக்கச் செல்வார்கள். அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பிறரின் உதவி தேவைப்படும். ஷெய்க் அவர்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் எதிரிகளிடம் தனக்கு உதவி புரிய அனுமதித்ததே இல்லை.

விசாரணைகளுக்கு முந்திய நாளே பிறரின் உதவி இல்லாமல்தான் இந்த மாத்திரைகளை உட்கொள்வார்கள். அல்லாஹ்வின் எதிரிகளிடமிருந்து ஒரு மிடர் தண்ணீர்கூட வாங்கிக் குடிக்காமல் இருப்பதற்கு விசாரணை தினங்க ளில் நோன்பிருக்கும் ஷெய்க் அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

* ஐந்துமாத சிறையனுபவமானாலும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாட்க ளில் மனதைப் பாதித்த ஏதேனும் நிகழ்வுகள் பற்றிக் கூற இயலுமா?

ஐந்து மாதம் ஷெய்க் அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புக் கிடைத்ததை நான் மிக பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தக் காலக்கட்டத்தில் மறக்கவிய லாப் பல சம்பவங்களும் நடந்தது. ஒரு நாட்காலியில் அமர்ந்து கட்டி லில் சாய்ந்துகொண்டுதான் ஷெய்க் அவர்கள் குர்ஆனை ஓதவும், சிறையில் அபூர்வ மாகக் கிடைக்கும் நூல்களையும் படிப்பார்கள். நூல்களின் பக்கங்களைப் புரட்ட சைகை காண்பிக்கும்பொழுது நான் அதனைப் புரட்டிக் கொடுப்பேன்.

ஒருமுறை நான் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாலும் களைப்பா லும் தூங்கிப் போனேன். திடீரென நான் தூக்கத்திலிருந்து விழித்தபோது நான் கண்ட காட்சி என்னை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. ஷெய்க் அவர்கள் நூலின் பக்கத்தைப் புரட்ட தலையை அசைத்தவாறு தலையையும் நெஞ்சையும் புத்தகத்தின் அருகில் கொண்டு வந்து நாக்கை வெளியில் நீட்டி அதனால் புத்தகத்தின் பக்கத்தைப் புரட்ட முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். இது ஒருபோதும் மறக்கவியலா நிகழ்ச்சியாக இருந்தது.

அக்காட்சியினால் துக்கமும் குற்ற உணர்வும் ஆச்சரியமும் உள்ளத்தில் தோன்றவே நான் ஷெய்க் அவர்களிடம் கேட்டேன், ஏன் உதவிக்கு என்னை எழுப்பவில்லை?

அதற்கு ஷெய்க் அவர்கள் கூறியபதில் அவர்மீது நான் கொண்டிருந்த மதிப்பை பன்மடங்காக்கியது. ஷெய்க் அவர்கள் கூறினார்கள், “எனக்கு சுய மாக செய்ய முடியும் காரியத்தை நான்தான் செய்ய வேண்டுமென்று உறுதி கொண்டுள்ளேன். உங்களுடைய உதவி மட்டும் இல்லாவிட்டாலும் தனியாக எழுந்துநிற்கவும் என்னால் இயலும்”.

இதைகேட்ட எனக்கு சிரிப்பு தோன்றியது. பக்கவாத நோயால் பீடிக்கப்பட்ட, இருகால்களையும் பயன்படுத்த இயலாத அந்த முதியவர் கம்பை ஊன்றிய வாறு எழுந்து நடப்பதும், ஒரு அடியெடுத்து வைக்கும்போதே தரையில் வீழ்வதும் மீண்டும் அதிக ரித்த ஊக்கத்தோடு கம்பை ஊன்றிய வாறு எழுந்து நிற்பதையும் நான் காண்பதுண்டு.

சிறிது காலத்திற்குப் பின் அவருடைய இயக்கத் தோழர்கள் அவருக்கு சக்கர நாட்காலி ஒன்றை வாங்கிக் கொடுத்தார்கள். நோயினால் துன்புற்ற வேளையி லும் சிறையில் கொடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட போதும் அறி வைத் தேடுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதை அந்த முதியவர் எங்களுக்குக் கற்பித்தார்.

0 comments for சிறை அனுபவம்

கருத்துரையிடுக

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505