dailyvideo


இஸ்லாத்தை பற்றி பிரபலங்கள்


சிந்திக்க. - அறிஞர்கள் தலைவர்கள் வரலாற்றாசிரியர்கள் பிரபலங்கள் பார்வையில் இஸ்லாம். 

அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும் - பெர்னார்ட் ஷா.



இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? 

அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளில் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது,

வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது.சரோஜினி நாயுடுவின் பேச்சும் எழுத்தும், (The Speeches and Writings of Sarojini Naidu), சென்னை, 1918, பக்கம் 167.



மைக்கேல் ஹார்ட்


மைக்கேல் ஹார்ட் மனித குல மேம்பாட்டிற்காக பங்காற்றிய சிறப்புக்குரியவர்களின் தொகுப்பை எழுதும் போது விவரிக்கின்றார் 

உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முஹம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். 

சமயஞ்சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே!


1400 ஆண்டுகள் கழிந்த பின் இன்றும் அவர்களுடைய வாழ்வும் வாக்கும் குறைக்கப்படாமலும் கூட்டப்படாமலும் எந்தவொரு மாற்றமுமின்றி நமக்கு அப்படியே கிடைக்கின்றன. 

மனித சமுதாயத்தின் பெரும் பிரச்சினைகளை அப்போதனைகள் அன்று தீர்த்து வெற்றி கண்டதைப் போலவே இன்றும் தீர்க்கும் வல்லமை வாய்ந்தவையாய் இருக்கின்றன. 

இதுவே வாய்மையாய் யாம் உலகிற்கு மொழியும் கூற்றாகும். வரலாற்றை ஆராயும் ஒவ்வொருவருக்கும் தென்படும் தவிர்க்க முடியாத முடிவாகும். - மைக்கேல் ஹார்ட் 
********

நமது காலத்தின் தலைசிறந்த சரித்திர ஆசிரியர் மைக்கேல் ஹார்ட்

மனித மேன்மையின் சிறப்பைக் குறித்து கூறுகிறார் : 

உயர்ந்த லட்சியம், குறைவான வசதிகள் வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம் மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்?


புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள். சட்டங்களை இயற்றினார்கள். பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவை தான்! 

பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்து விட்ட உலகாயதக் கோட்டைகளைத் தான் அவர்களால் நிறுவ முடிந்தது.


ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்களோ போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள், அரசவம்சங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை. அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார்கள்.


வழிபாட்டுத் தளங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துக்களையும், கொள்கையையும், நம்பிக்கைகளையும், ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களைப் பதித்தார்கள்.


வெற்றியின் போது அவர்கள் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத் தன்மை, தாம் ஏற்றுக் கொண்ட பணிக்காக தம்மையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அவரது உயர் நோக்கம், ஆழ்ந்த விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொள்ளாமல் உலகப் பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவர்களின் முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள்,


இறைவனுடன் அவர்கள் நடத்தி வந்த மெஞ்ஞான உரையாடல்கள், அவர்களின் மரணம், மரணத்திற்குப் பின்னரும் அவர்கள் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர்கள் ஓர் ஏமாற்றுக்காரர் என்றோ,மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிடவில்லை. 

மாறாக, சமயக் கொள்கை ஒன்றை நிலைநாட்டிட அவர்களுக்கிருந்த மனோ உறுதியைத் தான் பறைசாற்றுகின்றன. மைக்கேல் ஹார்ட் 
*********

“டாக்டர் அம்பேத்கார்"

பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.
-டாக்டர் அம்பேத்கார்.
*****

திவான் சந்த்

முஹம்மது இரக்கமே உருவானவர். அவரது இரக்கம் அவரைச் சுற்றியுள்ளவர்களைக் கவர்ந்திழுத்தது.

திவான் சந்த் ஷர்மா (D.C.Sharma – The Prophets of the East Calcutta 1935 pp 12) 
**********

“நெல்லை கண்ணன்"


Nellai kannan

உண்மைக்குப் புறம்பானோர் ஆட்சியிலேஉட்கார நேர்ந்திட்டால் விளைவதெல்லாம் நன்மைக்குப் பதிலாக தீமை ஒன்றே

நபி பெருமான் சொல்கின்றார் மக்களுக்காய்
மண் முழுதும் குழப்பங்கள் செய்து நிற்பார்
மண் தரும் நல் வேளாண்மை அழித்து நிற்பார்

கண்ணியமே இல்லாத அவர்கள் தம்மை
கடவுள் என்றும் தண்டிப்பார் அருள மாட்டார்

படைப்பனைத்தும் இறைவனது அருள் உணர்வீர்

பார்க்கின்ற உயிர் அனைத்தும் அவனின் கொடை

இடைப்பட்ட காலத்து வாழ்க்கை தன்னில்
எல்லோர்க்கும் உதவி செய்வீர் நன்மை செய்வீர்

கடையனென்று எவனுமில்லை இறைவன் முன்னே

கருணையில்லார் மட்டுமே கடையராவார்
உடைமையென்று மென்மேலும் சேர்த்து சேர்த்து 
உள்ளமின்றி வாழாதீர் வழங்கி நில்லும்

கொடுமையினைச் செய்வானைக் காப்பாற்றுங்கள்

கொடுமையினால் வீழ்ந்தானைக் காப்பாற்றுங்கள்

பட படத்தார் கேட்டார்கள் பெருமானிடம்
பாவியினைக் காப்பதுவா எவ்வாறென்று
கொடுமையினைச் செய்வானுக்கு அன்பு சொல்லி

கொடுமையினைச் செய்யாமல் திருத்திடுங்கள்

படுகிறவன் துயரத்தை உணர்த்தி அந்தப்
பாவத்தில் இருந்து அவனை விலக்கிடுங்கள்

நல்லவரைப் பதவியிலே அமர்த்தல் விட்டு
நாசவேலை செய்வோரை அமர்த்துகின்றார்
அல்லாவை அவரளித்த தூதர் தம்மை
ஆண்டவனுக்கு அஞ்சி வாழும் உண்மையோரை

பொல்லாத அச் செயலால் புறக்கணித்து
பொறுப்பின்றி அவர்கட்குத் துரோகம் செய்வார்

அல்லாவின் தீர்ப்பு நாளில் அவர்க்கு அல்லா

அளிப்பாரே நரகத்தை உண்மை உண்மை

கல்வி வழி ஞானத்தைப் பெற்றோரன்றி
கடவுளினைத் தீயவர்கள் அறிவதில்லை
நல்ல கல்வி இறைவனையே நம்பி நிற்கும்
நலமற்றோர் இறை இல்லை என்று நிற்பார்
வல்லவனாம் இறைவனையே வணங்கி நிற்போர்

வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார் இறையருளால்
அல்லாவை வணங்கி நிற்பீர் அருள் பெறுவீர்

அகிலமெல்லாம் அவன் கொடையே பணிந்து நிற்பீர்.

எழுதியது “Nellai Kannan"


நபி பெருமான் சொன்ன பதில்

இனத்தார் மேல் பற்றுக் கொள்ளல் தவறா என்று
இறைத்தூதர் நபி பெருமான் தன்னிடத்தில்
வினாவொன்று வைத்து நின்றார் நல்ல நண்பர்
விரைந்தங்கு நபி பெருமான் பதிலைச் சொன்னார்
இனத்தார் மேல் பற்று அவர்க்கு உதவி செய்தல்
எல்லாமே மிகச் சரிதான் ஆனால் மற்றோர்
இனத்தார் மேல் கொடுமை செய்ய உதவி நின்றல்
இனவெறி தான் நல்லதில்லை என்று சொன்னார்

எழுதியது நெல்லை கண்ணன்
(வேத வரிகளும் தூதர்மொழிகளும்)
வெளியீடு இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை சென்னை 12
**********


THAMILZANBAN”

ஒட்டகங்கள்
தேசத்தில் பிறந்தார்.
ஒட்டாத அகங்களை எல்லாம்
ஒட்டி வைத்தார்.
அவரைப் பற்றி
எழுதும் இரவுகளில்
விளக்குகள்
ஏற்ற வேண்டியதில்லை
எழுத்துக்களிலேயே
பளிச்சென்று வெளிச்சம்!
(சென்னைத் தொலைக்காட்சியில் வழங்கிய மீலாத் கவியரங்கில்) 
**********

"sir-cpramaswamy-iyer"

இன்றைக்கு உலகில் செயல்படும் ஒரே ஜனநாயக நெறி என்றே இஸ்லாத்தை நானும் மற்ற சிந்தனையாளர்களும் கருதுகிறோம். எனத் தொடரும் அவரது பேச்சில்

இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே என்ற அடிப்படை சித்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையை போன்று வேறேந்த மதமும் – அவற்றின் மத கருத்தோட்டம் எதுவாயினும் சரியே கடைபிடிக்கவில்லை.

தென் ஆபிரிக்காவில் போயர் இன மக்கள் பிரச்சனை , ஆஸ்திரேலியா அல்லது தென் அமெரிக்க நாடுகள் அல்லது இங்கிலாந்தின் பல்வேறு தரப்பட்ட இனமக்களின் பிரச்சனைகள் போன்று இஸ்லாத்தில் எத்தகைய இனப்பிரச்சினைகளும் இருக்கவில்லை.
டாக்டர் சர். சி. பி. இராமசாமி ஐயர் -[EasternTimes, 22 டிசம்பர், 1944.] 
*************

swami-vivekananda

மற்ற அனைத்து மக்களையும் விட அத்வைதக் கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாயிருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் அத்வைதம்- அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மை போல் சமமானவர் என்று பாவிப்பதும், அவ்வாறே நடந்து கொள்வதும் எனத் தொடரும் அவரது பேச்சில்

இத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாராட்டத்தக்க வகையில் அனுகியிருக்கிறதேன்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று நான் அனுபவப்பூர்வமாய் கூறுகிறேன். நான் அழுத்தமாய் சொல்கிறேன், 
நடைமுறைக்கு இசைவான இந்த செயல்பாடின்றி வேதாந்த கருத்துக்கள் எவ்வளவுதான் சிறப்பானதாக, பெருமைக்குரியதாக இருந்தாலும் பரந்து கிடக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே முடியும்.

சுவாமி விவேகானந்தர் – [Letters of Swami Vivekananda P.463] 
**********

william-moore


சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது.
வில்லியம்மூர் 
*********-

கார்லைல்"


நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.- தாமஸ் கார்லைல்.
**********


கிப்பன்"

அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே. –கிப்பன்.
*********


டால்ஸ்டாய்


நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, 

பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, 

அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல. 
டால்ஸ்டாய் 
*********-


washington-irving"


இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவர் மறுக்க முடியும்?
வாஷிங்டன் இர்விங் 
*******-


நேருஜி


முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். - ஜவஹர்லால் நேரு. 
******


நெப்போலியன்.


திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. -நெப்போலியன் 
**********

“பெர்னார்ட் ஷாவின்பார்வையில்"

பெர்னார்ட் ஷா


முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்கு பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். 
பெர்னாட்ஷா.
***********


“கவிக்குயில் கண்ட இஸ்லாம்"

"கவிக்குயில்" sarojini-naidu"


எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.

எனது முன்னோர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தத்துவ ஞான உபதேசம் செய்து கொண்டிருந்த காலத்தில் அரபுநாடு அந்தகாரத்தில் மூழ்கிக் கிடந்தது.

அநாகரிகமும் காட்டுமிராண்டித்தனமும் அங்கு குடி கொண்டிருந்தன. புத்தர், புத்தகயாவில் போதி மரத்தடியிலும் சாரநாத்திலும் நிர்வாணம் பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலத்தில் உலக ஜனநாயம் என்றால் என்னவென்றே ஒருவருக்கும் தெரியாது. ஆனால் அது எதிர்த்தும் போரிடப்பட்டது. கால்களால் மிதித்துத் துவைக்கப்பட்டது.

எனவே, ஆரேபியாவிலே ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதர் இறுதியாக இந்த உலகில் தோன்றி ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. 

எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதை அவரே விளக்க வேண்டியிருந்தது.

ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த இந்த மனிதர் யார்? இவர் உலகத்துக்கு நம்பிக்கையூட்டும் நல்ல செய்தியைக் கொண்டு வந்தது ஏன்?

பல பெரிய மதங்கள் மீது மாசு படிந்து விட்டது. 

அந்த மதங்களின் குருமார்கள் இழைத்த கொடுமைகள் சகிக்கமுடியவில்லை. என வேதத்துக்கு மாசு கற்பித்த அந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்று இந்த உலகம் விழைந்தது.

உலக மக்களுக்கு அவ்வப்போது இழைக்கப்படுகின்ற கொடுமைகளிலிருந்து அவர்களை எப்படியாவது விடுவித்து வருகின்ற ஆண்டவன் இந்த சாதாரண பாலைவன மனிதரின் இதயத்திலே, ‘ஆண்டவன் ஒருவன்’ என்ற உண்மையை உணர்த்தினான். 

ஆண்டவனால் படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உண்மையை உணர்த்த இந்த ஏக தெய்வக் கொள்கையே போதிய ஆதாரமாயிருக்கிறது.

மேல் நாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.


இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? 

பாரசீக இலக்கியம் ஆரியர்களுடையது என்று சொல்லிக்கொண்டு அதனை ஆர்வத்துடன் படிக்கின்றனர். சிலர் ஆனால் அந்த அழகிய மொழிக்கு ஆண்மையும் வீரமும் அளித்தவர்கள் அரபு நாட்டுப் போர் வீரர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?
கவியரசி சரோஜினி நாயுடு 
************


அண்ணா கண்ட இஸ்லாம் 
- அறிஞர் அண்ணா-


இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. 

தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. 

அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது. 

இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், ‘உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்’ என்று எழுதியிருக்கிறார்.

மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, ‘மதம்’ எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள். 
***********

காந்திஜி கண்டஇஸ்லாம்.


காந்திஜி


இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும்

செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள். - காந்திஜி.
*************


ப.சிதம்பரம்


அண்ணல் நபிகள் நாயகம் ஒரு மாமனித‌ர். அவரைக் குறித்து,சண்டையும் சச்சரவும் நிறைந்த‌ குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் த‌மது த‌னி முயற்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுகளுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த‌ பல‌ம் பொருந்திய சமுகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்த‌தோ என்று வரலாற்று ஆசிரியர் தாமஸ் கார்லைஸ் வியந்து எழுதினார். 

த‌ம்முடைய‌ ‘ய‌ங் இந்தியா’ ப‌த்திரிகைக‌ளில் முக‌ம்ம‌து ந‌பியின் உய‌ர் ப‌ண்புக‌ளைக் குறித்து ம‌காத்மா காந்தி எழுதியதைப் பாருங்க‌ள்.


இஸ்லாத்திற்கு அக்கால‌த்திய‌ வாழ்க்கைய‌மைப்பில் உய‌ர்ந்த‌ ஒர் இட‌த்தைப் பெற்றுத் த‌ந்த‌து வாள் ப‌ல‌ம‌ல்ல‌ என்று முன் எப்போதையும் விட‌ அதிக‌மாக நான் உண‌ர்ந்தேன்.

ந‌பிக‌ள் நாய‌க‌த்தின்மாறாத‌ எளிமை,த‌ம்மைப் பெரிதாக‌க் க‌ருதாம‌ல் சாதார‌ண‌மானவ‌ராக‌ ந‌ட‌ந்து கொள்ளும் உயர் ப‌ண்பு,எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக்காத்த‌ த‌ன்மை,த‌ம் தோழ‌ர்க‌ள் மீது அவ‌ர்கொண்டிருந்த‌ ஆழ்ந்த‌ அன்பு,அவ‌ர‌து அஞ்சாமை,இறைவ‌ன் மீதும் த‌ம‌து பிர‌சார‌ப் ப‌ணியிலும் அவ‌ர் கொண்டிருந்த முழுமையான‌ ந‌ம்பிக்கை ஆகிய‌வை தாம் அவ‌ரது வெற்றிக்குக் காரண‌ங்க‌ள்.

இஸ்லாம் ஒரு போராளிக‌ளின் ம‌த‌ம் என்றொரு தோற்ற‌ம் இருக்கிற‌து. வாள் ப‌ல‌ம் கொண்டேஇஸ்லாம் ப‌ர‌விய‌து என்றும் வாள் ப‌ல‌த்தைக் கொண்டு இஸ்லாமிய‌ர் மற்றவ‌ர்களை அச்சுறுத்துகிறார்க‌ள் என்றும் ஒரு க‌ருத்து நில‌வுகிற‌து. 

இஸ்லாமிய இய‌க்க‌ம் ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிற‌கே முன்னேறிய‌து என்ப‌தைக் க‌வ‌ன‌த்தில்கொள்ள‌ வேண்டும்.

அண்ண‌ல் ந‌பிக‌ள் நாயக‌ம் இறைவ‌னின் தூத‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌தை ந‌பித்துவ‌ம் என்று இஸ்லாம் குறிப்பிடுகிற‌து. 

ந‌பிக‌ள் நாய‌க‌த்தின் ப‌ணியை இஸ்லாம் அழைப்புப் ப‌ணி என குறிப்பிடுகிற‌து. இந்த‌ அழைப்புப் ப‌ணியை இர‌ண்டு கால‌ க‌ட்ட‌ங்க‌ளாக‌ப் பிரிக்க‌லாம். 

முத‌ல் காலக‌ட்ட‌ம் ம‌க்கா ந‌க‌ரில் ந‌ட‌ந்த‌ ச‌காப்த‌ம். இது 13 ஆண்டுகள் நீடித்த‌து. இர‌ண்டாவ‌து கால‌ க‌ட்ட‌ம் ம‌த‌னீ ச‌காப்த‌ம். இது 10 ஆண்டுக‌ள் நீடித்த‌து. ம‌க்கீ ச‌காப்தத்தில் ந‌பிக‌ள் நாய‌க‌த்தின் மீதும் அவ‌ருடைய‌ அழைப்புப் ப‌ணியின் மீதும் சொல்லொணாத‌ கொடுமைக‌ளும், அக்கிர‌ம‌ங்க‌ளும் க‌ட்ட‌விழ்த்து விட‌ப்பட்ட‌ன‌.

அன்றைய‌ அதிகார‌வ‌ர்க்க‌த்தின‌ர் ந‌பிக‌ள் நாய‌க‌த்தை பைத்திய‌க்காரர் என்று ப‌ழித்தார்க‌ள். 

அவ‌ருடைய‌ பேச்சைக் கேட்கயாரும் போக‌க் கூடாது என்று த‌டை விதித்தார்க‌ள். 

முஸ்லிம்க‌ளைக் க‌ண்ட‌ போது அவ‌ர்க‌ளைத் திட்டினார்கள். வ‌சை பாடினார்க‌ள்.


ஆயினும் இஸ்லாமிய‌ அழைப்பின்பால் ம‌க்க‌ள் க‌வ‌ன‌ம் திரும்பி ஏராள‌மான‌வ‌ர்கள் திர‌ண்டார்க‌ள். த‌ன்னுடைய‌ இறுதி ஆயுத‌மாக‌ வ‌ன்முறையை அதிகார‌வ‌ர்க்க‌ம் ஏவி விட்ட‌து. முஸ்லிம்க‌ள் மீது இழைக்க‌ப்ப‌ட்ட‌ துன்ப‌ங்க‌ள் அவ‌ர்க‌ளால் தாங்க‌ முடியாத‌ அள‌விற்குச் சென்று கொண்டிருந்த‌தைப் பார்த்த‌ பிற‌கு,ம‌க்கா ந‌க‌ரிலிருந்து வெளியேறுவ‌து என்று ந‌பிக‌ள் நாய‌க‌ம் முடிவெடுத்தார்.

ம‌க்கீ ச‌காப்த‌ம் ஒரு பெரும் போராட்ட‌ காலமாக‌ இருந்த‌து. பிற‌கு தொட‌ங்கிய‌தே ம‌த‌னீ ச‌காப்த‌ம். த‌ம்மையும் த‌ம்முடைய‌ ம‌த‌த்தையும் த‌ற்காத்துக் கொள்ள‌வே முஸ்லிம்க‌ள் போராட்ட‌க் குண‌த்தை வள‌ர்த்துக் கொள்ள‌ வேண்டியிருந்த‌து. அர‌சிய‌ல் ம‌ற்றும் காழ்ப்பு உண‌ர்வுக‌ளின் கார‌ண‌மாக‌வே இஸ்லாத்திற்கு எதிராக‌ அவ‌தூறு பிர‌ச்சார‌ம் ந‌டந்த‌து என்ப‌தே உண்மை.


பேராசிரிய‌ர் பெவான் என்னும் வ‌ர‌லாற்று நூலாசிரிய‌ர், முக‌ம்ம‌தைப் பற்றியும் இஸ்லாம் ப‌ற்றியும் 19 ஆம் நூற்றாண்டின் ஆர‌ம்ப‌த்தில் எழுத‌ப்ப‌ட்ட‌வையெல்லாம் இல‌க்கிய‌ விந்தைக‌ளாகி விட்ட‌ன என்று குறிப்பிடுகிறார்.

இஸ்லாம் ஏக‌த்துவ‌ம், ம‌றுமை ஆகிய‌ கோட்பாடுக‌ளை வ‌லியுறுத்துகிற‌து. ஒரே இறைவ‌ன் என்ப‌து மூல‌க்கோட்பாடு. அவ‌னை ஒத்த‌தோ, விஞ்சிய‌தோ ஏதுமில்லை. அவ‌ன் அதிப‌தி. அவ‌னிடம் எந்த‌ குற்ற‌மும், குறையும் காண‌ முடியாது.


அவ‌ன் உட‌ல்க‌ளை உருவாக்கிய‌வ‌ன். ஆன்மாவை உண்டாக்கிய‌வ‌ன். அவ‌னே இறுதித் தீர்ப்பு நாளின் அதிப‌தி. இதுவே ஏக‌த்துவ‌ம். 

உங்க‌ளுள் ம‌றைந்திருப்ப‌வையும், இந்த‌ உல‌கில் உங்க‌ளிட‌மிருந்து ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌வையும் மறுஉல‌கில் உங்க‌ள் முன் வெட்ட‌ வெளிச்ச‌மாகிவிடும் என்ப‌து மூல‌க்கோட்பாடு.

இதுவே ம‌றுமை. இந்த‌ அடிப்ப‌டைக் கோட்பாடுக‌ளில் என்ன‌ குற்ற‌த்தைக் காண‌ முடியும்?

எல்லா ம‌த‌ங்களிலும் அடிப்ப‌டைக் கோட்பாடுக‌ளைச் சிதைப்ப‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். கால‌ப்போக்கில் ப‌ல‌ மூட‌ ந‌ம்பிக்கைக‌ளும் ம‌லிந்து விடுகின்ற‌ன‌.


ம‌த‌ம் என்ப‌து ஒரு போர் வாளாக‌ மாறிவிடுகிற‌து. இந்து ச‌ம‌ய‌த்திலும், கிறிஸ்துவ‌ ச‌ம‌ய‌த்திலும், யூத‌ ச‌ம‌ய‌த்திலும் தீவிர‌வாதிக‌ள் இருப்ப‌தைப்போல் இஸ்லாத்திலும் தீவிர‌வாதிகள் இருக்கிறார்க‌ள். 

இந்த‌ தீவிர‌வாதிக‌ளினால் தான் ம‌த‌ங்க‌ளிடையே ப‌கை வ‌ள‌ர்கிற‌து. இந்த‌த் தீவிர‌வாதிக‌ளின் சொல்லையும் செய‌லையும் கொண்டு ஒரு ம‌த‌த்தை ம‌திப்பிட‌க்கூடாது.

திருக்குர் ஆனைப் ப‌டிப்ப‌த‌ற்கும், ந‌பிகள் நாய‌க‌த்தின் வாழ்க்கை வ‌ர‌லாற்றைப் படிப்ப‌த‌ற்கும் வாய்ப்புக‌ளை உருவாக்கிக் கொள்ள‌ வேண்டும்.


திருக்குர்ஆன் ஓத‌ப்ப‌ட்ட‌ கால‌ம் கி.பி.610. ஓர் எழுத்துக் கூட‌ மாறாம‌ல் எந்த‌ இடைச் செருக‌ல்க‌ளுக்கும் உள்ளாகாம‌ல் ஒரு நூல் உள்ள‌து என்றால் அது திருக்குர்ஆன் ம‌ட்டுமே என்று ச‌ர் வில்லிய‌ம் மூர் குறிப்பிடுகிறார்.

திருக்குர் ஆனை ஏற்று ந‌பிக‌ள் நாய‌க‌த்தை இறைத்தூத‌ராக‌ப் போற்றும் இஸ்லாமிய‌ ச‌முதாய‌த்தின‌ர் மற்ற‌ ம‌த‌ங்க‌ளைச் சார்ந்த‌வ‌ர்க‌ளின் சகோத‌ர‌ர்க‌ள் என்ற உண‌ர்வு ப‌ர‌வ‌ வேண்டும் என்று விழைகிறேன்.

( குட‌வாச‌ல் புதிய‌ ப‌ள்ளிவாச‌ல் திற‌ப்பு விழாவினையொட்டி வெளியிட‌ப்ப‌ட்ட‌ அருள் வ‌ச‌ந்த‌ம் எனும் ம‌ல‌ரிலிருந் )

தகவல் : இனியவன் ஹாஜி முஹம்மது. 
***************

சுஜாதா கண்ட இஸ்லாம்
sujaatha.


தினமணி (2003) ரம்ஜான் மலரில் சுஜாதா எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி கீழே…

“திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று ‘குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா’ என்றார். நான் 

உடனே புத்தகக் கடைக்குப் போய், ‘தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம்.

‘வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! 

எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!’ என்று வியந்தோம்.

அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘அண்ணல் நபிகளார் வாழ்வினிலே’ போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.


மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மத்தின் சொற்பொழிவுகளின் தொகுப்பான ‘இஸ்லாமியச் சிந்தனைகள்’, நவீன உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. 

குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.

எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம்தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.

இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும்.


முழுமுதற் கடவுளாகிய அல்லாவுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.

காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.


‘சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்!’

‘திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுதுமாய் அவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்’ என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!


தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், 

புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், 

ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீய குணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் அண்ணல் நபிகள் சொல்கிறார்.


திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். 

திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.”
- சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் – 2003) 

நன்றி: திரு.ரவிபிரகாஷ் 
****************

அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம்
– நியூயார்க் டைம்ஸ், பிப்ரவரி 21, 1989, பக்கம் 01.
**********


இஸ்லாம். வழிகாட்டியாகவும் நிலையான தூணாகவும் பலருக்கு அது இருக்கிறது.– ஹிலரி ரோட்மேன் க்ளிண்டன், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், மே 31, 1996, பக்கம் 3.
******


இஸ்லாம் அமெரிக்காவில் தொடந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரும் அதை சந்தேகிக்க முடியாது. - – சி.என்.என், டிசம்பர் 15, 1995.
******


அமெரிக்காவில் முஸ்லிம்கள் இப்போது ஐம்பதிலிருந்து அறுபது லட்சம் பேர் இருக்கிறார்கள். 

ப்ரெஸ்பிட்டீரியன்கள், எபிஸ்கோபேலியன்கள், மோரோமோன்கள், க்வேக்கர்கள், யூனிட்டேரியன்கள், 
செவந்த்டே அட்வெண்டிஸ்டுகள், மென்னொனைட்டுகள், 
ஜெஹோவாவின் சாட்சிகள், 
கிறிஸ்தவ விஞ்ஞானிகள் 
இவர்கள் எல்லாரையும் விட முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்கள். 

அமெரிக்காவில் இரண்டாவது பெரிய மதமாக யூதமதம் இருந்தது.ஆனால் அந்த இடத்தை இப்போது இஸ்லாம் பிடித்து விட்டதாக பல மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்கள் கருதுகிறார்கள்.

– ஜான் ப்ளாங்க், யூஎஸ்நியூஸ், 07/20/1998.
*****


இஸ்லாத்தில் உள்ள அருமையான கருத்தாக்கங்களில் ஒன்றுதான் அதன் நீதியுணர்வு. 

அன்றாட வாழ்க்கைக்குரிய, அகில உலகமும் பயன்படுத்தக்கூடிய வாழ்க்கை பற்றிய நடைமுறைக் கோட்பாடுகளை நான் குரானில் படித்தேன். — Ideals of Islam என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட விரிவுரைகள். 

சரோஜினி நாயுடுவின் பேச்சும் எழுத்தும், (The Speeches and Writings of Sarojini Naidu), சென்னை, 1918, பக்கம் 167.
***********

அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளில் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது, வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது.

டெ லேஸி ஓ லியரி, Islam at the Croosroads,லண்டன், 1923, பக்கம் 08.
*****

மனிதர்களுக்கு இடயே உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பிரக்ஞையின் அழிவை ஏற்படுத்தியது இஸ்லாத்தின் தலைசிறந்த சாதனைகளில் ஒன்றாகும். இந்த இஸ்லாமிய உணர்வை தற்கால உலகத்தில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

ஏ.ஜே.டாய்ன்பீ (உலகப்புகழ் பெற்ற வராலாற்றாசிரியர்), Civilization On Trial, நியூயார்க், 1948, பக்கம் 205.
*****


வழக்கமான அர்த்தப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிமல்ல. 

ஆனால் இறைவனிடம் சரணாகதி அடைந்தவனே முஸ்லிம் என்ற கருத்துப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிம்தான்.


குர்ஆனில் பல தெய்வீக உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். எங்களைப் போன்ற மேற்கத்தியர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

W.மாண்ட்கோமரி, இஸ்லாமும் கிறிஸ்தவமும் இன்று (Islam and Christianity Today), லண்டன், 1983, பக்கம் ix
*****


இஸ்லாம் வழங்கும் சகோதரத்துவம் உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கிறது. 
அவர் என்ன நிறத்தில், என்ன கொள்கையில், என்ன கோட்பாட்டில், என்ன இனத்தில் இருந்தாலும். இந்த சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான். 

முஸ்லிம்கள் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, தாங்கள் சகோதரர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.
– ஆர்.எல்.மெல்லமா, ஹாலந்து, மானிடவியலாளர், எழுத்தாளர், அறிஞர்.
********


முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி: 

இறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர் முஹம்மதுதான்.

என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா
******


இந்த உலகம் சார்ந்த இருபது சாம்ராஜ்ஜியங்களையும் மறுமை சார்ந்த ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவியவ ஒருவர் முஹம்மது.மனிதனுடைய பெருமையையும் புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிட சிறந்த ஒருவரை நாம் காட்ட முடியாது.

– லா மார்ட்டின், ஹிஸ்டரி துலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277.
******


அருமையான உயிர்த்தன்மை காரணமாக, முஹம்மதின் மார்க்கத்தை நான் எப்போதுமே ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். மாறிக்கொண்டே இருக்கின்ற இந்த உலகில், எல்லாவற்றையும் இணைக்கும் தகுதி படைத்த ஒரே மதமாக இஸ்லாம்தான் உள்ளது. 

எல்லாக் காலங்களிலும் கவரக்கூடியதாக அது இருக்கும். 

முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டேன். 
******


அவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் (Saviour of Humanity). இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டு வந்த பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும். 

இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன்.


அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும்.

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).
******


சமய ரீதியாகவும், சமயம் சாராத லௌகீகம் சார்ந்த வகையிலும் வெற்றியடைந்த ஒரு மனிதரைக் காட்ட முடியுமென்றால் அது முஹம்மதுதான். அதனால்தான் இந்த உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 100 மாமனிதர்களில் முதலாமவராக நான் முஹம்மதைத் தேர்ந்தெடுத்தேன்.

– மைக்கேல் ஹார்ட், த ஹண்ட்ரட், நியூயார்க், ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி, 1978, பக்கம் 33.
*****–


போப்புக்கான பாசாங்குகளும், சீசருக்கான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும் போப்பாகவும் இருந்தவர் முஹம்மது. 

தெய்விக கட்டளை கொண்டு ஆண்ட ஒரு மனிதன் உண்டென்றால் அது முஹம்மதுதான்.

– பாஸ்வொர்த் ஸ்மித், Mohammad and Mohammadanism, லண்டன்,1874, பக்கம் 92.
******


அரேபியாவின் மாபெரும் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் வாழ்க்கையையும்,அவர் எப்படி வாழ்ந்தார், எப்படி வாழக் கற்றுக் கொடுத்தார் என்று படிக்கும் யாருக்கும் அவர் மீது மரியாதை தவிர வேறு எதுவும் ஏற்படாது. – அன்னிபெசண்ட், The Life and Teachings of Muhammad, சென்னை,1932, பக்கம். 4.
******


கோடிக்கணக்கானவர்களின் இதயத்தில் விவாதத்துக்கு இடமில்லாத வகையில் இடம் பிடித்த ஒருவரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினேன்…

இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்ற உண்மை எனக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது. 

மகாத்மா காந்தி,’யங் இந்தியா’ பத்திரிக்கையில் 1924ல் எழுதியது.
******


இஸ்லாத்தின் பிடிவாதமான எளிமை, இறைத்தூதர் முஹம்மதுவின் பரிபூரணமான சுயநலமற்ற தன்மை, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் அவர் வைத்திருந்த மரியாதை,

தன் தோழர்கள் மீதும் தன்னைப் பின்பற்றியவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த அளவற்ற பிரியம், தீவிரமான அர்ப்பணம், அவரது வீரம், எதற்கும் அஞ்சாத தன்மை, 

கடவுள்மீது அவர் வைத்திருந்த பரிபூரண நம்பிக்கை, அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பணி மீது இருந்த கடமையுணர்வு இவைதான் இஸ்லாம் பரவுவதற்குக் காரணம்.


ஒவ்வொரு தடையையும் மீறி இஸ்லாம் வந்தது இவைகளால்தான். வாளால் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த மகாவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது.


ராணுவ வெற்றிகளின்போது, மற்றவர்களிடம் ஏற்படுவதைப்போல, பெருமையோ வீண் பேச்சோ முஹம்மதுவிடம் ஏற்படவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் உழன்று கொண்டிருந்தபோது எப்படி எளிமையாகத் தோன்றினாரோ, நடந்து கொண்டாரோ, அப்படியே வெற்றியின் உச்சியில் இருந்த போதும் இருந்தார்.அநாவசியமாக தனக்கு மரியாதை தரப்படுவதை அவர் வெறுத்தார்.
– வாஷிங்டன் இர்விங், Life of Muhammad, நியூயார்க், 1920.
********


ரொம்ப உற்சாகமாக நம்மவர்கள் முஹம்மதைப் பற்றிச் சொன்ன பொய்களும் அவதூறுகளும் நம்மையே கேவலப்படுத்துவதாக உள்ளது.

– தாமஸ் கார்லைல். Heroes and Hero Worship and the Heroic in History, 1840.
******

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். 

ஜவஹர்லால் நேரு - 
********

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.


எஸ். எச். லீடர்
*******


இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்?


- வாஷிங்டன் இர்விங் -
*******


நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும் மனித குலம். முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.


- டாக்டர் ஜான்சன் -
*******


முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.
- பெர்னாட்ஷா -
******


இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது. - ஜி.ஜி. கெல்லட் - 

******

சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது. - வில்லியம்மூர்
******

ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.
- காந்திஜி -
******

அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே.-கிப்பன்
******

ஆர்தர் ஜே.ஆர்பெர்ரி (Arthur J.Arberry) கூறுகிறார்:

குர்ஆனுடைய கருத்துக்களை வெளிக் கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்சிகளை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன்.

ஆனால் அரபி மொழியில் குர்ஆனில் இருக்கும் அழகையும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிகக் குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது. 

மிகத் துல்லியமாக பின்னி பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன. 

குர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதை உணர்ந்தேன். 

உலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச் செய்கின்றன. 

குர்ஆனின் இந்த விநோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும். 

பிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது. 

அதனுடைய சொற்களின் ஓசை நயமே மக்களின் கண்களை கசியச் செய்கிறது. 

உள்ளங்களை பரவசமடையச் செய்கிறது’ என்று பிக்தால் தம் மொழி பெயர்ப்பில் சொன்ன கருத்து எந்த வகையிலும் மிகையானதல்ல.

-The Koran Interpreted , London: Oxford University Press, 1964, Page 10
*****

இஸ்லாம் தோற்றுவித்த உன்னத மரபுகளில் ஒன்று நீதி மற்றும் நியாய உணர்வாகும். 

குர்ஆனை நான் ஆய்ந்து படித்த போது அது அறிவுறுத்திய புரட்சிகரமான கொள்கைகள், வெற்று ஞானமாக இல்லாமல் வாழ்வின் நடை முறை போதனையாக நடைமுறை வாழ்வுக்கு இசைவானதாக முழு உலகிற்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதைக் கண்டேன்.
-Sarojini Naidu, Lectures on”The Ideals Of Islam” see sand writings of Sarojini Naidu, Madras, page 167
*******

மகாத்மா காந்தி

தென் ஆப்ரிக்காவில் உள்ள ஐரோப்பியர்கள் இஸ்லாம் பரவி விடும் என்று பயப்படுவதாக சிலர் கூறினார்கள்.

இஸ்லாம் ஸ்பெயினுக்கு நாகரீகத்தைக் கற்று தந்தது. மொராக்கோவுக்கு ஒளியைக் கொண்டு வந்தது. 

உலகுக்குச் சகோதரத்துவம் எனும் கொள்கையை போதித்தது. தென் ஆப்ரிக்காவில் உள்ளவர்கள் வெள்ளை இனத்தாருடன் சம உரிமை கோரக் கூடும் என்பதால் தென் ஆப்ரிக்காவில் உள்ள அய்ரோப்பியர்கள் இஸ்லாமின் வருகைக்காக அஞ்சுகிறார்கள். 

அவர்கள் நன்றாக பயப்படலாம். சகோதரத்துவம் என்பது பாவம் என்றால். கறுப்பு நிறத்தவர்களுடன் சமத்துவத்திற்காக அவர்கள் அஞ்சினால் அந்த அச்சத்துக்கும் காரணம் உண்டுதான்.

Mahatma Gandhi Quoted in “Mohamed The Prophet Of The Islam” by Ramakrishna Roa. Page 8
*****


கலைஞர் கருணாநிதி


செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம்.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அதுவும் அரேபிய நாட்டில் மிக காட்டுமிராண்டித்தனம் கோலோச்சிய அந்த நேரத்தில் ஒரு மனிதர் ஆயிரக்கணக்கான தெய்வங்களை வழிபட்ட மக்களுக்கு மத்தியில் நின்று புரட்சிகரமான சில கொள்கைகளைச் சொல்லி, அந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு யாராவது கிடைப்பார்களா? 

என்ற சந்தேகத்திற்கிடையே, அதைச் சொல்லத் தொடங்கி, முதலில் அவருடைய கொள்கை ஏற்றுக் கொண்டவர் அவருடைய துணைவியர், கதீஜா அம்மையார் என்ற அளவில் முதலில் அளவிற்குதான் அவருடைய வழியை பின்பற்றுகிறவர்கள் என்று தொடங்கி, 

இன்றைய தினம் அகிலம் முழுவதும் முழுவதும் ஈடு இணையற்று பெரும் இயக்கமாக இஸ்லாமிய மார்க்கம் பரவியிருக்கிறது என்றால் ‘ஐயோ’ இதை யாரும் ஏற்றுக்கொள்ள வில்லையே, நம்முடைய துணைவியார் மட்டும் தானே ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறார்’ என்ற சோர்வு அவருக்கு வந்திருக்குமேயானால் அந்தக் கொள்கைகள் இறுதியாக ஆக்கப்பட்டிருக்கும், இந்த அளவிற்கு வளர்ந்திருக்க இயலாது.

நபிகள் நாயகம் அவர்கள் உலகத்தைத் திருத்த முன் வந்தார். உலக மக்களைத் திருத்த முன் வந்தார். காட்டுமிராண்டித்தனத்தில் உழன்றவர்களைத் திருத்த முன்வந்தார். எதிர்ப்புக்களுக்கிடையே சில காரியங்களைச் செய்தார் வாளோடு வாள் மோதுகின்ற போராட்டங்களுக்கு இடையே சில காரியங்களைச் செய்தார். சில நேரங்களில் எதிரிகளால் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஒடக்கூடிய சூழ்நிலையிலும் சிலகாரியங்களை அவர் துணிவோடு செய்ய முன்வந்தார்.


அந்தக் காலத்தில் அராபிய நாட்டுநிலையை எப்படி இருந்தது என்றால். பயணம் செல்கின்ற நேரத்தில் கூட பயணிகள் தங்களுடைய பயணத்தின் போது நான்கு கற்களை எடுத்துச் செல்வார்களாம். 

அதற்குக் காரணம் வழியில் சமையல் செய்ய மூன்று கற்களை வெத்து அதன் மீது பாத்திரங்களை வைத்து சமையல் செய்வார்களாம். 

நான்காவது கல் எதற்காக என்றால், ஆண்டவன் என்று அந்தக் கல்லை வணங்குவதற்காகவாம். 

இந்த அளவிற்கு கல்லில் கடவுளை வணங்க, இறைவனைக் காண, சிலையில் இறைவன் இருக்கிறான் என்ற உருவ வழிபாட்டில் அன்றைக்கே தங்களை ஆட்படுத்திக்கொண்டிருந்த உன்மத்தம் பிடித்த ஒரு நிலையை, தாங்கள் உருவாக்கிய ஒரு மாபெரும் புரட்சியால் தகர்த்துக் காட்டி ஒன்றே இறைவன்.


அந்த இறைவன் இட்டவழி அறவழி, அன்புவழி, அந்த வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்கின்ற மார்க்க போதனையைச் செய்த மக்கள் சமுதாயத்தில் பெரும்பகுதியை தன்பால் ஈர்த்த மகத்தான சக்தி வாய்ந்த மனிதர்தான் நபிகள் நாயம் அவர்கள்.

நபிகள் நாயகம் மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்திக்கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. 

இன்று நாட்டிலே பார்க்கிறோம். பலபேரை. தங்களைத் திருத்திக்கொள்ள வக்கற்றவர்கள்-வகையற்றவர்கள் மற்றவர்களைக் குற்றம் சொல்லுவதும்-மற்றவர்களைத் திருத்திக்கொள்-திருத்திக்கொள் என்பதும், இன்றைக்கு வழக்கமாக ஆகி விட்டிருக்கிறது.


இப்படிப்பட்ட நிலையில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறை எந்த அளவுக்குச்செம்மையாக அமைந்திருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒப்பற்ற மாமனிதர், இறைவனுடைய நிலை உருவத்திலேயில்லை. அது அவரவர்களுடைய அபிமானத்திலே இருக்கிறது. உள்ளத்தின் கருணையிலே இருக்கிறது. உள்ளம் பொழிகின்ற அன்பிலே இருக்கிறது என்கிற உயரிய கருத்தை உலகுக்கு வழங்கிய உத்தமர்.
கலைஞர் கருணாநிதி -

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505