Dajjal Arrivals
அன்பின் சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தஜ்ஜால்! இவனுக்கு என்ன பெரிய முக்கியத்துவம்? ஏன் இவனைக் கண்டு
நாம் அஞ்ச வேண்டும்? என்ற கேள்விகள் சிலருக்கு எதார்த்தமாக ஏற்படுவதுதான். கீழேயுள்ள தொடுப்பை கிளிக் செய்து பார்த்துவிட்டு பின்னர் உங்கள் எண்ணங்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.
நாம் அஞ்ச வேண்டும்? என்ற கேள்விகள் சிலருக்கு எதார்த்தமாக ஏற்படுவதுதான். கீழேயுள்ள தொடுப்பை கிளிக் செய்து பார்த்துவிட்டு பின்னர் உங்கள் எண்ணங்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.
Dajjal Arrivals
சகோதரர்களே! நம்மில் பலர் வழக்கம்போல மனதிற்குள்
1. நாம ரொம்ப பிஸி, என் கம்பெனி மேளாலருக்கு முக்கியமான ரிப்போட் பண்ணவேண்டியிருக்கு. இந்த கட்டுரையை எல்லாம் படிப்பதற்கு நேரமா இருக்குது? என்றோ
2. பெரிய மெயிலா இருக்கே, ஸ்க்ரோல்பண்ணி இறுதிவரை பார்த்துவிட்டு மூடிவிடலாம் என்றோ
3. நண்பர்கள் 4 பேருக்கு இதை அனுப்பி வைப்போம் நம்ம கடமை முடிந்தது, நண்பர் படித்து பயன் பெற்றால் நமக்கும் நன்மையும் கிடைக்கும் என என்னுவதுண்டு.
அதுபோல அல்லாமல், விதிவிலக்காக உங்களையும் எங்களையும் இந்த நவீன தஜ்ஜலிஸத்தை தெரிந்து தெளிவாக விளங்கி நம்மையும், நம் குடும்பத்தையும் அதிலிருந்து காப்பாற்ற பாக்கியம் அளித்த வல்ல இறைவனை புகழ்கிறோம்.
சில சிரமங்களுக்கு மத்தியில் நமக்கு கிடைத்த இந்த அளப்பெரிய தகவல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்குவதில் நாம் பெருமிதம் அடைகிறோம் - அல்ஹம்துலில்லாஹ்.
இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்) நிச்சயமாக உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரண்டு கண்களுக்கிடையே 'காஃபிர்' (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் புஹாரி:7131, அறிவிப்பாளர் அனஸ் (ரழி)).
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் நம்மிடம் கீழ்காணும் கேள்விகளைக் கேட்டார், அதாவது
• அமெரிக்க டாலரில் பொறிக்கப்பட்டுள்ள ஒற்றைக் கண்ணுடன் கூடிய பிரமிடுகள் எதைக் குறிக்கின்றன?
• தங்களின் வரவு செலவு திட்டங்களுக்குக்கூட உலக வங்கியில் கடன் வாங்கும் இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகள் விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் எதிரும் புதிருமாக நிற்பதற்கு யார் காரணம்?
• அமெரிக்க வங்கிகளில் தீடீர் சரிவு ஏன் ஏற்பட்டது? எங்கேயோ இருந்த ஒபாமா என்பவர் அமெரிக்க அதிபராக குறுகிய காலத்தில் எப்படி ஆக முடிந்தது என்றெல்லாம் வினவினார்.
அவருடைய ஆய்விற்காக மேற்கண்ட விஷயங்களோடு ஹார்ப் தொழில்நுட்பம், அந்நிய கிரக மனிதர்கள் சாத்தியமா, பூமி வெப்பமடைதலின் மர்மம் என்ன? போன்ற விஷயங்களை பற்றி நாமும் தேடிக்கொண்டிருந்தோம். இந்த வேளையில்தான் பல தகவல்களை உள்ளடக்கிய ஹாஸிம் அப்துல்லாஹ் குழுவினரின் படைப்புகளை பற்றி அறியநேரிட்டது அல்ஹம்துலில்லாஹ்.
முஸ்லிம்கள் ஆட்சிபுரியும் அரபு தீபகற்பத்திலும்கூட தஜ்ஜாலை வரவேற்கும் முகமாக யூதர்கள் திட்டமிட்டு செய்துகொண்டிருக்கும் பல சூழ்ச்சிகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். குறிப்பாக ஃபிர்அவ்ன் எவ்வாறு தஜ்ஜாலை வரவேற்று பிரமிடுகளுக்குள் சில அமைப்புகளை ஏற்படுத்தியிருந்தானோ அதை அப்படியே நகல் எடுத்ததைபோல துபை மாநகரின் அல்-வாஃபி மால் கட்டப்பட்டுள்ளதை அறிந்து உண்மையிலேயே வேதனையுற்றோம்.