dailyvideo


அன்றும், இன்றும்


அன்றைய அறியாமை காலத்தில் 360 சிலைகள் நிரம்பிய கஃபாவில், முஆவியா கோத்திரத்தார் கொடுத்த ஹுபைல் சிலையே பிரதானமானது. அடுத்து குறைஷியரின் பெருமைக்குறிய ஆலயங்களாக மூன்று
விளங்கின.”கடவுளின் பெண் மக்கள்” என்று பக்தியோடு வணங்கப்பட்ட லாத், உஸ்ஸா, மனாத் கோவில்களாகும்.

1, மதீனாவிற்கு மேற்கே செங்கடலை ஒட்டிய ‘குதைத்’ என்னும் பிரதேசத்தில் இருந்தது. “மனாத்” கோவில்.

2, மக்காவிலிருந்து ஒரு நாள் பிரயாண தூரத்தில் இருந்தது ‘நக்லா’ எனும் சமவெளி பிரதேசம். இங்கிருந்தது அல்-உஸ்ஸாவின் குறைஷிகளின் அதிக சிறப்பு வாய்ந்த ஆலயம்.

3, தாயிப் நகரில் ஹவாஸின் கோத்திரமான ‘தகீப்’ களின் நிர்வாகத்தில் இருந்த கோயில் “தாயிப்மாது” என்று பெருமையுடம் அழைக்கப்பட்ட சிலை ‘அல்-லாத்’ ஆகும். ஏகத்துவம் வெற்றி பெற்றதும் நபி (ஸல்) அவர்கள் இணை வைக்கும் கேந்திரங்களை அழித்தொழிக்க அலி(ரழி), காலித் பின் வலீத்(ரழி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். “அல்-உஸ்ஸா”வின் ஆலயத்தை அழித்தபின் காலித்(ரழி) கூறினார். என் தந்தை வலீத் 100 ஒட்டகங்களையும் செம்மறி ஆட்டு மந்தைகளையும் கொண்டு சென்று உஸ்ஸாவிற்கு பலி கொடுத்து தம் நேர்ச்சைகளை நிறைவேற்றி வருவார். இன்று நபி (ஸல்) அவர்கள் அழித்தொழித்த இணைவைத்தலின் கேத்திரங்கள் இன்று நம்மிடையே இஸ்லாமிய பெரியார்களின் பெயர்களை தாங்கி தர்ஹா ஆலயங்களாக திகழ்கின்றன.

ஜாஹிலியா (அறியாமை) கால ‘வலீத்’கள் கூட்டம் இன்றும் தங்கள் நேர்ச்சைகளை, குர்பானிகளை அவ்வாலயங்களில் நிரைவேற்றி மகிழ்ச்சியோடு திரும்புகின்றனர். நபி(ஸல்) அவர்கள் இணைவைக்கும் வியாபாரத் தலங்களை மக்கள் நடமாட்டமில்லாத வனாந்திரங்களாகவும், ஷிர்க்கின் (இணைவைத்தல்) பீடங்களாக இருந்த ஊர்களை, நகரங்களை ஜன சஞ்சாரமற்ற பாலைவனங்களாக மாற்றி யிருந்தார்கள். இன்று நமது நாட்டில், ஷிர்க்கின் தலைமை பீடங்களாக இணை வைக்கும் வியாபாரத் தலங்களாக அஜ்மீர், நாகூர், ஏர்வாடி, முத்துப் பேட்டை போன்றவைகள் திருவிழா கோலத்துடன் ஊருக்கு ஊர் காட்சியளிக்கின்றன.

கபுர் வணக்கம், பூப் போடுதல், உரூஸ், இசை நிகழ்ச்சி, ஸஜ்தா செய்தல், கபுர் கட்டிடம் கட்டுதல், தரைக்கு மேல் உயர்த்துதல், பிரார்த்தனை செய்தல் போன்ற அனைத்து செயல்களும் இன்று நேர்வழிகளாக மாற்றப்பட்டன. கபுருக்கு பெண்கள் செல்வது, விளக்கேற்றுவது, அல்லாஹ்வின் சாபத்திற்குறிய செயல்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அன்று கூறினார்கள். இன்று அடக்கஸ்தலங்கள் பெண்களுக்கு பரக்கத் தரக்கூடிய இடங்களாக காட்சி தருகின்றன. சபிக்கப்பட்டவைகள் (லஃனத்) இன்று பரகத்தாக மாறிவிட்டன. இதுதான் இஸ்லாம் என்று எண்ணி ஏமாந்த அப்பாவி முஸ்லிம்கள் அங்கு பலியிட்டு பிரார்த்தனை செய்யக் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். ஆம்! இங்கு இணைவைப்பு இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறுகிறது.

0 comments for அன்றும், இன்றும்

கருத்துரையிடுக

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505