சூடான் நூறு வீத இஸ்லாமிய அரசிலமைப்பை அடிப்படையாக இருக்கும் - ஜனாதிபதி
சர்வதேச குழு: சூடான் நாட்டில் 100 வீதம் இஸ்லாமிய அடிப்படையிலான அரசியலைப்பை
கொண்டதாக இருக்கும் என சூடான் ஜனாதிபதி உமர் ஹஸன் அல் பஷீர் அவர்கள் கூறினார்கள். இது அண்டை நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என ஜுலை மாதம் 7ம் திகதி சனிக்கிழமை அறிவித்தார்.
ஈரான் குர்ஆன் செய்திகள் ஸ்தாபனம் (இக்னா): த நியுஸ் ட்ரைப் இணையத்தளத்திலிருந்து கிடைத்த தகவலின் படி, தென் சூடான் சில பகுதிகள் பிரிக்கப்பட்டதும் அப்பகுதியில் வாழும் மக்கள் முஸ்லிம் அல்லாத பகுதியாக மாறும். இவ்வாறான ஊகங்கள் நாட்டில் இஸ்லாமிய சட்டங்களை ஏற்படுத்த தீவிரப்படுத்தியது.
இவ்வாறான மாற்றங்கள் அரசியலில் அபிவிருத்தியை உருவாக்க வழிவகுக்கும் என சூடான் ஜனாதிபதி அவர்கள் மதத் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்
நாம் இவ்வாறான புதிய அரசியலமைப்பை வழங்கி அயல் நாடுகளுக்கு முன்மாதிரியை அறிமுகப்படுத்த வேண்டும். இந்த முன்மாதிரி 100 வீதம் இஸ்லாமிய அடிப்படையிலான அரசியலமைப்பைக் கொண்டதாக அமையும் என்றார். இவ்வரசியலைப்பு கம்யூனிசம் மற்றும் மதசார்பற்ற மேற்கத்திய தாங்களிலிருந்து விடுதலை பெற்றதாக அமையும்.
ஜனாதிபதி தனது உரையில் அரசியலமைப்பின் மாற்றத்திற்கான சரியான தேதியை அறிவிக்க வில்லை.