dailyvideo


பைபிளில் முஹம்மது நபி அவர்கள் 2


நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். அப்போது என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாக வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருள்வார்.’ (யோவான் 14:16)


‘பிதாவிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சி கொடுப்பார்’ (யோவான் 15:26)


‘நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் போகிறது உங்களுக்குப் பிரயேஜனமாயிருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார். நான் போவேனாகில் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன்’(யோவான் 16:7-11)


‘சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்’(யோவான் 16:3)


‘ஆகையால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கணிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்’ (மத்தேயு 21:43)


‘அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி, அவர்கள் சொன்னது சரியே. உன்னைப் போல ஒரு தீர்க்க தரிசியை நான் அவர்களுக்கூக அவர்கள் சகோதரர்களிடமிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்திலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகேடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்’ (உபாகமம் 18:17-19)

அன்பார்ந்த கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே!

சற்று சிந்தித்து, பின் வரும் வினாக்களுக்கு விடை காண முன்வாருங்கள்: -

மேலேயுள்ள வாக்கியங்களில் கூறப்பட்டுள்ள, வரப்போகிற சத்திய ஆவியான தேற்றரவாளன் யார்?
அவர் சொல்லப் போகிற விடயங்கள் யாவை?
கர்த்தரின் நாமத்திலே அவர் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகேளாதவனின் நிலை என்ன?
கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே, அந்த தேற்றரவாளர் வேறு யாருமில்லை. இந்த அகில உலக மக்களுக்கும் கர்த்தரின் சத்திய வாக்கினை எடுத்துக் கூறி மக்களை நல்வழி கூறி கர்த்தருடைய நேர்வழியை காட்டிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள்.

ஹீப்ரு மொழியிலிருந்து ஏனைய பாஷைகளுக்கு பைபிளை மொழி பெயர்க்கப்பட்ட போது, ‘முஹம்மது’ என்ற பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தும் அதனை திட்டமிட்டு மறைத்து விட்டனர். உண்மை தானாகவே வெளிச்சத்திற்கு வந்து விட்டது. (பைபிளின் மூல நூலில் சாலமன் பாடல்கள் 5:16 ல் ‘முஹம்மதிம்’ என்று இருந்த பெயரை மொழி பெயர்க்கும் போது மாற்றி விட்டனர். ஹீப்ரு மொழியில் ‘திம்’ என்ற அடைமொழி மரியாதையைக் குறிக்கும் சொல்லாகும்)

முஹம்மது என்ற பெயரை திரித்து தேற்றரவாளர் எனக் கூறப்பட்ட என்ற அந்த தீர்க்கதரிசி கூறிய விடயங்கள் தான் சத்திய மார்க்கமான இஸ்லாம்.

கர்த்தரின் நாமத்திலே அவர் (முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்ததைகளுக்கு கட்டுப்படாதவர்களை மறுமையில் கர்த்தர் தண்டிப்பார். (உபாகமம் 18:17-19)

எனவே என தருமை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, முஹம்மது (ஸல்) அவர்கள் குறித்தும் மற்றும் இஸ்லாம் குறித்தும் பைபிள் கூறும் கருத்துக்களை நீங்கள் சற்று நடுநிலையோடு சிந்தித்து தெளிவு பெற வேண்டுகிறோம்.

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505