பைபிள் - ஓரு விரிவான அலசல் பக்கம் 1
பைபிள் - ஓரு விரிவான அலசல்
(Reference : Bibilinte Daivikatha by MM Akbar in Malayalam)
பிப்ளியா (biblia) என்ற கிரேக்க மற்றும் லத்தீன் மூலப் பதத்திலிருந்து உருவானது பைபிள் (bible) என்ற வார்த்தை. புத்தகங்கள் என்பது இதன் பொருளாகும். புராதன் பிரெஞ்சு மொழியிலிருந்து இது ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. பிப்ளியா என்பது பன்மை வார்த்தையாகும். இதன் ஒருமை பிப்ளியோன் (biblion) என்பதாகும்.
புத்தகங்கள் என்று மட்டும் பொருள் கொண்ட பைபிளுக்கு கிறித்தவ வேத புத்தகம் என்ற அடிப்படைப் பெயரை வழங்கியவர் அன்றைய கான்ஸ்டான்டிநோபிளின் மதத் தலைவராக இருந்த ஜாண் கிரிஸோஸ்டமான் (392-404) என்பவர் என்று நம்பப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித ஜெரோம் என்பவரே முதன் முதலில் பைபிள் என்ற பெயரை வழங்கியவர் என்ற கருத்தும் நிலவுகிறது.
பல்வேறு காலகட்டங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட பல புத்தகங்களின் கோர்வையே பைபிள். அதாவது பைபிள் ஒரு புத்தகம் என்பதை விட பல புத்தகங்களின் கோர்வை எனலாம்.
தீர்க்கதரிசிகளின் வரலாறுகள் பிற்கால எழுத்தர்களால் எழுதப்பட்டு பெரியதொரு தொகுப்பாகக் காணப்படும் பைபிளை கிறித்தவர்கள் இறைவேதம் என்று நமபுகின்றனர். எனினும் அது முழுக்க முழுக்க இறைவனால் அருளப்பட்டது என்ற கிறித்தவர்களின் வாதம் பல்வேறு காரணங்களால் ஏற்கப்பட முடியாததாக உள்ளது.
பல்வேறு ஆசிரியர்களால் தொகுக்கப்ப்டட புத்தகங்களின் ஒரு கோர்வைக்கு பைபிள் என்ற பெயர் பிற்காலத்தில் வழங்கப்பட்டது என்பதே ஆய்வுகள் வழங்கும் சான்று .
ஆனால் இதற்கு மாறாக அருளப்ப்டட காலத்திலிருந்து இன்று வரை மாறாமல் நிலை நிற்கும் குர்ஆன் அப்பெயரைத் தன்னகத்தே கொள்வதுடன் அது இறைவேதம் என்றும் பிரகடனம் செய்கிறது. சில வசனங்கள்:
ரமளான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டி யாகவும், இன்னும் நேர்வழியிலிருந்தும், (சத்தியத்தையும் - அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதிலிருந்தும் தெளிவாக்கக்கூடிய சான்றுகளைக் கொண்ட துமான (ஃபுர்கான் என்னும்) குர்ஆன், இறக்கியருளப்பட்டது. (2:185)
இந்தக் குர்ஆனை அவர்கள் ஆராய வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து உள்ளதாக இருந்திருக்கு மாயின் இதில் பல கருத்து வேறுபாடுகளை அவர்கள் கண்டிருப்பர். (4:82)
மேலும், இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதவர்களால் கற்பனை செய்யப் பட்டதல்ல; அன்றியும், (இதற்கு) முன் (அருளப்பட்டு) உள்ளதை உண்மைப் படுத்துவதாகவும், (முந்திய) வேதத்தை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே,) அகிலத்தாரின் ரப்பிடமிருந்துள்ள இதில் எந்த சந்தேகமும் இல்லை. (10:37)
நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி (மொழி)யிலான குர்ஆனாக, நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். (12:2)
அலிஃப், லாம், றா. (நபியே!) இவை வேதத்தினுடையவும் தெளிவான திருக்குர்ஆனுடையவுமான வசனங்களாகும். (15:1)
நிச்சயமாக இந்தக் குர்ஆன், (மனிதர்களுக்கு) எது மிகமிக நேர்மையானதோ அதன்பால் நேர்வழி காட்டுகிறது. அன்றியும், நற்செயல்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப்பெரும் கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது (17:9)
தாஸீன்; இவை குர்ஆனுடைய, இன்னும் தெளிவான வேதத்தினுடைய வசனங் களாகும். (27:1)
முற்றிலும் ஞானமுள்ள (இக்)குர்ஆனின் மீது சத்தியமாக! (36:2)
மேலும், திட்டமாக நாம், குர்ஆனை நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே எளிதாக்கி வைத்துள்ளோம். ஆகவே (இதன் மூலம்) படிப்பினை பெறுவோர் உண்டா? (54:17)
அளவற்ற அருளாளன், இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். (55: 1,2)