ஸகாத்தின் பொருள்
இதன் பொருள் தூய்மையுறச்
செய்தல் என்பதாகும். ஒருவன் தன்
உடைமைகளிலிருந்து நாற்பதில் ஒருபகுதியை எடுத்து ஏழைகளுக்கு அறம் செய்வதன்
மூலம் அவனிடம் எஞ்சியுள்ளவை தூய்மை பெறுவதாலும், அவனுடைய உள்ளமும்
உலோபித்தனத்திலிருந்து தூய்மை பெறுவதாலும் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது
.
செல்வம் செல்வந்தர்களை மட்டுமே சுற்றி வரக்கூடாது. அது சமுதாயத்தின்
எல்லா நிலை மக்களையும்சென்றடைந்து எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்ற உயரிய
நெறிபை; போதிப்பதாகும். இதுவேபொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வை போக்குவதற்கு
சிறந்த வழி என்று இஸ்லாம் உலகிற்கு பிரகடனம்செய்கிறது. இதைத்தான் அருள்மறை
அல்-குர்ஆன் பின் வருமாறு இயம்புகிறது. كي لا يكون دولة بين الاغنياء منكم (
الحشر 59:7)
உங்களுடைய செல்வம் நாட்டிலுள்ள செல்வந்தர்களுக்கிடையே
சுற்றிக்கொண்டிருக்கக்கூடாது (59:7)
ஸகாத்தின் விதிகள் என்னென்ன?
1) ஸகாத் பொருள் தனக்கு உரியதாக இருக்க வேண்டும்.
2) அளவு (நிஸாப்) முழுமை பெறவேண்டும்.
3) ஓராண்டு காலம் நிறைவு பெறவேண்டும்.
4) (கடன்கள் இல்லாமலிருக்க வேண்டும்.
5) சொந்த தேவைகள் போக மீதயிருக்க வேண்டும்.)
ஸகாத் கொடுப்பதற்கு கடமைப்பட்டோர் யார் ?
ஸகாத் வரி குறிப்பிட்ட அளவு (நிஸாப்), பொருள் படைத்த ஒவ்வொரு
முஸ்லிமின்மீதும் இஸ்லாம்விதியாக்கியுள்ளது. தொழுகை நோன்பு, ஹஜ்ஜு போன்ற
வணக்கங்களில் சிறுவர்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதோருக்கும்
விதிவிலக்கு அளிக்கப்படுவது போல் ஸகாத்தில் விதிவிலக்கு
வழங்கப்படவில்லை.அவர்களிடம்குறிப்பிட்ட தொகை இருந்தால் அவர்களின்
பொறுப்பாளர்கள்,அவர்களிடமிருந்து
ஸகாத்தைப் பெற்று வழங்கியாகவேண்டும். ஏனெனில் இது ஏழைகளுக்கு போய் சேர
வேண்டிய உரிமையாகும்.
ஸகாத் விதியானோர் ஐந்து பேர்
1. முஸ்லிமாக இருத்தல்
2. சுதந்திரமானராக இருத்தல்
3. நிஸாபை அடைதல் (85 கிராம் தங்க மதிப்புடைய பொருளைப் பெறுதல்) 4. பொருளுக்கு உரியவராக ( Owner) இருத்தல்.
5. விளை பொருளைத்தவிர அனைத்தும் ஓராண்டு பூர்த்தியாகுதல் இத்தகுதிகளைப்பெற்ற அனைவரும் ஸகாத் கொடுக்க வேண்டும்.
யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் ?
8 பிரிவினர்)انما الصدقات للفقراء والمساكين
والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن
السبيل فريضة من الله والله عليم حكيم ( التوبة 9:60)
1)யாசிப்போர் (ஃபக்கீர்)
2) ஏழைகள் (மிஸ்கீன்)
3) ஸகாத் வசூலிப்போர்.
4) இஸ்லாத்தை தழுவ விரும்புவோர்.
5) அடிமைகளை விடுதலை செய்வதற்காக!
6) கடன்பட்டோர்.
7) இறைவழியில் அறப்போர் செய்வோர்.
8) பயணிகள் (வழிப்போக்கர்) ( அல்-குர்ஆன் 9:60 )
யார் யாருக்கு கொடுககக்கூடாது ?
1) வசதியுள்ளோர்.
2) உடல் வலிமை பெற்றோர்.
3) தனது பெற்றோர்.பிள்ளைகள் ( அல்-அஸ்லு வல்ஃபர்உ)
4) நபியின் குடும்பத்தினர்.
5) முஸ்லிமல்லாதோர்.
6) தீயவர்கள்.
எப்போது வழங்க வேண்டும் ?
இது ரமளானில் தான் வழங்கவேண்டுமென பலரும் எண்ணிக்கொண்டு அம்மாதத்தைத்
தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இஸ்லாம் அவ்வாறு குறிப்பிடவே இல்லை.
பின் எப்போது கொடுக்க வேண்டும் ?
ஒருவருக்கு உணவு,உடை, வீடு, வாகனம், தொழிலுக்குத் தேவையான பொருட்கள்
(கருவிகள்) போன்றஅவசியத் தேவைகள் போக ஒருகுறிப்பிட்ட அளவு அல்லது அதற்கு
மேல் செல்வமிருந்தால் கணக்கிட்டு நூற்றுக்கு இரண்டரை சதவிகிதம்
கொடுக்கவேண்டும்.
அதுவும் குறிப்பிட்ட அளவை (நிஸாபை) பெற்றவுடன் அல்ல. அந்த தொகை ஒர்
ஆண்டு முழுவதும் அவனிடம் இருந்து, ஆண்டு இறுதியில் கொடுத்தால் போதுமானது.
எந்த அளவுக்கு ஸகாத் வழங்கவேண்டும் ?
20 தீனாருக்கு குறைவானவற்றில் ஸகாத் கடமையில்லை.20தீனார்கள் ஓராண்டு
முழுவதும் உம்மிடமிருந்;தால் அதற்கு நீர் ஸகாத் கொடுக்க வேண்டும்’ என
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் : அஹ்மது, அபூ தாவூது, பைஹகீ) மேற் கண்ட நபி மொழியில் 20 தீனார்
அளவு அல்லது அதற்கு மேற்பட்ட அளவு வைத்திருப்போர்தான் ஸகாத் கொடுக்க
கடமைப்பட்டுள்ளனர்.
என்பது தெரிய வருகிறது.
நபிகள் நாயகம் காலத்தில் செல்வம் என்பது தங்க வெள்ளி நாணயங்களாகவோ,
கால்நடைகளாகவோ சொத்தாகவோ இருந்தது. இப்போதுள்ளது போல் விலையுயர்ந்த
வைரங்கள், பிளாட்டினங்கள் இருந்ததில்லை. கரன்ஸி நோட்டுகள் இருந்ததில்லை.
தங்கத்தின் மதிப்பை வைத்தே நோட்டுகள் அச்சடிக்கப் படுவதால் தங்கத்தின்
விலையையும் வைத்தே இன்று அனைத்தையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஸகாத் கடமையான பொருட்கள்:
ஸகாத் ஐந்து வகை பொருட்கள் மீது கடமையாகிறது:
1) தங்கம், வெள்ளி,
2) வியாபாரப் பொருட்கள்
3) கால் நடைகள் 4) விவசாய விளைச்சல்கள்
5) புதையல்கள்
ஸகாத்தின் சதவிகித அளவுகள்
1. 2.5 (இரண்டரை)சதவிகிதம்
2. 5 சதவிகிதம்
3. 10 சதவிகிதம்
4. 20 சதவிகிதம் என பொருளின் இனம் மாறுபடும் போது சதவிகிதமும் மாறு படுகிறது.இனி இவற்றை விரிவாகாப் பார்ப்போம்.
1. இரண்டரை சதவிகிதம் ஸகாத்
1. தங்கம்நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வழக்கிலிருந்த ஒரு
தீனார் தங்க நாணயத்தின் மதிப்பு இன்றைய மெட்ரிக் அளவில், 4..25 கிராமாகும்.
20 தீனாருக்கு 85 கிராம் தங்கத்தின் அளவாகும்.
பெருமானார் (ஸல்)
அவர்கள் ஒவ்வொரு 20 மித்கால் (தீனார்) தங்கத்துக்கும் அரை மித்கால்
தங்கத்தை( அதாவது 40ல் ஒரு பாகத்தை) ஸகாத்தாக எடுப்பார்கள். ( இப்னு மாஜா)
யாரிடமேனும் தமது அத்தியாவசியப் பொருட்களான உணவு,உடை, உறையுள்,தொழிற்
கருவிகள்போக 85 கிராம் தங்க நகைகளோ, தங்கமோ, அல்லது அதற்கு மேற்பட்டோ
ஓராண்டு முழுவதுமிருந்தால்அதற்கு நாற்பதில் ஒரு சதவிகிதம்-அதாவது இரண்டரை
சதவிகிதம்- ஸகாத் கொடுத்தாக வேண்டும்.
உதாணமாக ஒருவரிடம் 100 கிராம் தங்கம் ஓராண்டு முழுவதும் இருந்தால்
அதில் இரண்டரை கிராம்(இரண்டரை சதவிகிதம்) -தங்கத்தை அல்லது அதற்கு இணையான
விலையை ஸகாத்தாக கொடுக்க வேண்டும்.
வருடத்துவக்கத்தில் 100 கிராமிருந்து
பின்னர் தன் தேவைக்கு ஒரு 10 கிராமை எடுத்துச் செலவு செய்து விட்டால் வருட
இறுதியில் எஞ்சிய 90 கிராமுக்குரிய ஸகாத்தை வழங்க வேண்டும்.
2. வெள்ளிவெள்ளி நகைகள், வெள்ளிப் பாத்திங்கள்,
வெள்ளிக் காசுகள் போன்றவற்றிற்கும் ஸகாத் வழங்கப்பட வேணடும்.200 திர்ஹமோ
அதைவிடக்கூடுதலோ வெள்ளிக்காசுகள் வைத்திருப்போர் மீது ஸகாத்
கடமையாகும்.ஐந்து ஊக்கியா (ஒரு ஊக்கியாh 40திர்ஹம்.40ஓ5ஸ்ரீ200 திர்ஹம்)
அளவை விடக்குறைந்த வெள்ளிக்காசுகளுக்கு ஸகாத் இல்லை என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீதுல்
குத்ரிய்யி (ரலி), புகாரி : 1447)
200 திர்ஹம் (வெள்ளி) இருக்கும் போது அதில் ஐந்து திர்ஹம் ஸகாத் கொடுக்க வேண்டும்..
மேற்கூறிய ஹதீஸிலிருந்து 200 திர்ஹத்திற்கு குறைவான எடைக்கு ஸகாத்
கிடையாது எனத் தெரிகிறது.இன்றைய மெட்ரிக் எடையில் ஒரு திர்ஹத்திற்கு 595
கிராம் ஆகும். 200 திர்ஹத்திற்கு(200ஒ2.975) 595 கிராம் ஆகிறது. தனது
அவசியத்தேவை போக ஒருவரிடம் ஓராண்டிற்கு 595 கிராம் அல்லது
மேற்பட்டுவெள்ளியிருந்தால் (40 ல் ஒரு விகிதம்) இரண்டரை சதவீதம் (அதாவது
14.875 கிராம்) ஸகாத் வழங்க வேண்டும்.
3. நகைகள்; தங்க வெள்ளி நகைகளில் அணிந்திருக்கும்
நகைகளுக்கு ஸகாத் உண்டா என அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள்
காணப்;பட்டாலும் பெரும்பாலான அறிஞர்கள் ஸகாத் கொடுக்க வேண்டுமெனகீழுள்ள
ஆதாரங்களை முன் வைக்கின்றனர்.
இருபெண்கள் தங்கக் காப்புகள் அணிந்து பெருமானார் (ஸல்) அவர்களிடம்
வந்தனர். அப்போது உங்களிருவருக்கும் மறுமை நாளில் நெருப்புக் காப்புகள்
அணிவிக்கப்படுவதை விரும்புவீர்களா ? என அவர்ளிடம் கேட்டபோது
விரும்பமாட்டோம் என பதிற் கூறினர். அவ்வாறாயின் உங்கள் கைகளில்
அணிந்திருப்பவைகளுக்குரிய ஸகாத்தை கொடுத்து விடுங்கள்; என நபி (ஸல்) எனக்
கூறினார்கள். அறிவிப்பவர்:
அம்ருப்னு சுகைபு (ரலி),
ஆதாரம்: இப்னு ஹஸம்நானும் எனது சிறியதாயாரும் தங்கக்காப்புகள் அணிந்து
கொண்டு நபிபெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.அப்போது இதற்கு ஸகாத்
கொடுத்து விட்டீர்களா ? எனக்கேட்hர்கள். இல்லை என்றோம்.நரக நெருப்பை உங்கள்
கரங்களில் அல்லாஹ் அணிவிப்பதைப்பற்றி உங்களுக்கு அச்சமாக இல்லையா? இதற்கான
ஸகாத்தைச் செலுத்திவிடுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது (ரலி), ஆதாரம்: அஹ்மத்
நான் வெள்ளி மோதிரங்கள் அணிந்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டனர்.
இதற்குரிய ஸகாததைச்செலுத்திவிட்டாயா? ஏன்று கேட்டனர்.
இல்லையென்றேன்.அவ்வாறாயின் இதுவே உன்னை நரகிற்சேர்க்கப்போதுமானதாகும்.
என்று ஏந்தல் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது
(ரலி), ஆதாரம்: அபூதாவூது, தாரகுத்னீ, பைஹகீ
மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தங்க வெள்ளி நகைகளுக்கும் ஸகாத் உண்டு
என்பதை நபி(ஸல்)அவர்கள் வலியுறுத்துவதைக் காணலாம்.(தங்கம், வெள்ளிக்குரிய
மதிப்பீட்டை அன்றைய மார்கெட் நிலவரப்படி கணித்துக்கொள்ளவேண்டும்)
ஆண்டுதோறும் கொடுக்கவேண்டுமா?ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஸகாத் கொடுத்தால்
போதுமானது. ஆண்டு தோறும் கொடுக்க வேண்டியதில்லை என்ற வாதத்தை பரவலாகக்
காணமுடிகிறது. இவர்கள் முன்வைக்கும் வாதத்தையும் ஆதாரஙடகளையும்
பின்னர்காண்போம்.
எனினும் ஆண்டு தோறும் ஸகாத் கொடுக்கவேண்டுமென்றே பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும் அவர்களின் பின்னர் வந்த
கலீபாக்கள்காலத்திலும் ஆண்டு தோறும் வசூலித்து வந்துள்ளதைக் காணமுடிகிறது.
நபிகளாரின் காலத்திலும் குலபேயே ராசிதீன்கள் காலத்திலும் ஸகாத்
வசூலிப்பதற்காக வருடந் தோறும் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். எந்த
நாயகத் தோழரும் அவ்வாறு கொடுப்பதற்கு மறுப்பு தெரிவிக்க வுமில்லை. இதை
வைத்தே உலகின்பெரும்பாலான அறிஞர்கள் ஆண்டுதோறும் ஸகாத் கொடுக்கவேண்டுமெனத்
தீர்;ப்பு வழங்கியுள்ளனர்.
ஸவூதி அரேபியாவின் மிகப்பெரும் மார்க்க மேதைகளான அஷ்ஷைகு பின் பாஸ்
(ரஹ்) அவர்களும், ஸாலிஹ்அல்-உதைமீன் (ரஹ்) போன்றவர்களும் இக்கருத்தையே
வலியுறுத்துகின்றனர்.
(மேற்கோண்டு விளக்கத்திற்கு தொடர்-2 கட்டுரையைப்பார்க்க)
4. ரூபாய்கள் 85 கிராம் தங்கத்திற்கு நிகரான வகையில் கரன்ஸிநோட்டுகள்
குறிப்பிட்ட காலஅளவு நம்மிடமிருந்தாலும்வங்கியிலிருந்தாலும் அதற்கான
ஸகாத்தையும் நாம் கணக்கிட்டு கொடுத்து வரவேண்டும்.
5. வியாபாரப் பொருட்கள்
வியாபாரத்திற்கு வைத்திருக்கும் எந்தப் பொருளாக இருப்பினும் அதற்கு
கட்டாயம் ஸகாத் வழங்கியேஆக வேண்டும்.ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்:-நாங்கள் வியாபாரத்திற்கென வைத்திருக்கும் பொருட்களுக்கு
ஸகாத் வழங்க வேண்டுமென நபி ( ஸல் )அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
ஆதாரம் : அபூ தாவூது, பைஹகீ
மூலதனத்திற்கும் மட்டும் ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது
மூலதனத்திற்கும் இலாபத்திற்கும் சேர்த்தே கொடுக்க வேண்டுமா? என்று பலரும்
கேட்கின்றனர். மூலதனத்திற்கும் இலாபத்திற்கும் சேர்த்தே கொடுக்கவேண்டும்
என்பதே அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.ஆதாரம்: உமர் (ரலி) அவர்கள்
ஆடுகளைப் பெற்றிருந்த ஒருவரிடம் அதற்குரிய ஸகாத்தை கேட்டபோதுஅவை ஈன்ற
குட்டிகளை விட்டு
விட்டு ஸகாத் கொடுக்க முன் வந்தார். அப்போது அதற்குரிய
குட்டிகளையும்கணக்கில் சேர்ப்பீராக! என அவர்கள் கூறிய செய்தி இமாம் மாலிக்
(ரஹ்) அவர்களின் முவத்தாவில் இடம் பெற்றிருக்கிறது. இதை ஆதாரமாகக் கொண்டு
வியாபாரத்தில் இலாபமாகப்பெற்ற தொகைக்கும் சேர்;த்தே ஸகாத்தை
கணக்கிடவேண்டும் என்பதை அர்ரவ்லுல் முரப்பஃ ஸரஹ் ஸாதுல் முஸ்தக்னஃ
பாகம்4,பக்கம்17ல்
குறிப்பிடப்பட்டுள்ளது.)
1) ஒருவர் பத்து இலட்ச ரூபாய் முதலீடு செய்து ஜனவரிமாதம் ஒரு
வியாபாரத்தைத் தொடங்குகிறார் என்றுவைத்துக்கொள்வோம்.ஓராண்டு முடிந்து
அடுத்த ஜனவரியில் கணக்குப்பார்க்கும்போது வியாபாரம் வளர்ந்து செலவு சம்பளம்
போக 5 இலட்ச ரூபாய் அதிகமிருக்கிறது. இப்போது மூலதனமாகிய
ரூ10இலட்சத்துக்கும் ஓராண்டுக்குப்பிறகு இலாபமாகக் கிடைத்த 5
இலட்சத்துக்கும் சேர்த்து
15இலட்சத்துக்கு இரண்டரைசதவீதம்(அதாவது 37,500 ரூபாய் ) ஸகாத் கொடுக்க
வேண்டும். மூலதனமாகிய 10 இலட்ச ரூபாய்க்கு மட்டும் கொடுத்தால் போதுமானது
என்பதற்கு ஆதாரமில்லை.
2)அடுத்து பத்து இலட்ச ரூபாய் முதலீடு செய்து வியாபாரம் செய்கிறோம்.
வினியோக வியாபாரிகளிடமிருந்து கடனாகப் பெற்ற ஐந்து இலட்சத்திற்குரிய
வியாபாரப் பொருட்களும் கடையில் உள்ளன.வரவேண்டிய பாக்கிக்கடன் தொகை மூன்று
இலட்சம் உள்ளது. ஆண்டு இறுதியில் கணக்குப் பார்க்கும் போது 7 இலட்ச ரூபாய்
இலாபமாக கிடைத்துள்ளன. இப்போது கடையில் ஆண்டு இறுதியில் 1010 5107 ரூ 22
இலட்சம் உள்ளன.
இவற்றில் கடனாகப் பெற்ற தொகையையும் வரவேண்டிய தொகையையும் கழித்து 14
இலட்சத்திற்கு ஸகாத்கொடுக்க வேண்டுமா ? அல்லது இருப்புக்கு மட்டும் கொடுக்க
வேண்டுமா என்ற ஐயங்கள் எழுகின்றன..ஆண்டு இறுதியில இருப்பில் உள்ள மொத்த
தொகைக்கும் (அதாவது 1010510710 ரூ 22 இலட்சத்துக்கு இரண்டரை சதவிகிதம்
(ரூபாய் 55000.00) ஸகாத் கொடுக்க வேண்டும்.
3) பிறருடைய பொருள் நம் பொறுப்பில் இருந்தாலும் அது ஸகாத்துடைய அளவை
அடைந்து ஓராண்டு முழுமையாகநம்மிடம் இருந்து விட்டால் ஓரராண்டுக்குரிய
ஸகாத்தை கொடுத்து விடவேண்டும். அந்தப் பொருளை ஸகாத்துடைய காலவரையை
அடைவதற்கு முன் திருப்பிக் கொடுத்து விட்டால் அதற்கு ஸகாத் கொடுக்க
வேண்டியதில்லை.
4) அது போல நாம் திருப்பிச்செலுத்த வேண்டிய கடன் தொகை நம்மிடம்
ஒருவருடம் இருந்துவிட்டாலும் அதற்குரிய ஸகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து
விடவேண்டும். ஸகாத் காலவரைக்கு முன்னர் திருப்பிச் செலுத்திவிடடால் ஸகாத்
செலுத்த வேண்டியதில்லை.
கடன் தொகை
5)சதாரணக் கடனாகட்டும். வியாபாரக் கடனாகட்டும். கடன் கொடுத்த தொகை
கண்டிப்பாக வரும் தொகையும் உண்டு. வராதவையும் உண்டு. கண்டிப்பாக வரும்
தொகைக்கு அந்த ஆண்டே கணக்கிட்டு ஸகாத் கொடுத்து விடவேண்டும். வராத தொகைக்கு
கையில் கிடைத்ததும் அதற்குரிய ஸகாத்தை கணக்கிட்டு கொடுத்து விடவேண்டும்.
பலஆண்டுகள் சென்று இந்த கடன் தொகை கிடைப்பதாக இருப்பின் அவற்றிற்கு அண்டு
தோறும்
என்ற கணக்கில்லாமல் ஒரேஒரு தடவை மொத்தத் தொகைக்கும் கொடுத்தால் போதுமானது.
6. வங்கியில் போடும் வைப்பு நிதி,, குறித்த கால வைப்பு நிதியும்
சேமிப்புப் பத்திரம் நிறுவனப்பங்குகள் அவை கைவசமிருக்கும் பணமாகக் கருதி
ஒரு வருடம் பூர்த்தியானதும் ஆண்டுதோறும் ஸகாத் கொடுத்து வரவேண்டும்.
7. சொந்த வீடுகள், வாடகை வீடுகள்நாம் குடியிருக்கும் வீட்டிற்கு ஸகாத்
கிடையாது. ஆயினும் வாடகைக்கு விடப்படும் வீடுகளில் வரும் வருமானத்திற்கு
இரண்டரை சதவீதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
8. கடைகள், விடுதிகள் (லாட்ஜுகள்) வாடகைக்கு விடப்படும்
கடைகள்,கட்டடங்கள்,விடுதிகள்(லாட்ஜுகள்) ஆகியவற்றிற்கும் ஸகாத்
கிடையாது.அதில் வரும் வாடகைக்கு இரண்டரை சதவீதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
9. நிலங்கள், வீட்டு மனைகள்விவசாய நிலங்கள், வீட்டு மனைகள்
ஆகியவற்றுக்கும் ஸகாத் இல்லை. ஆனால் அவற்றிலிருந்து வரும் வருவாய்க்கும்,
விற்பனை செய்வதாக இருந்தால் அதன் மதிப்புத் தொகைக்கும் இரண்டரை சதவீதம்
ஸகாத் கடமையாகும். இவை வியாபாரச் சரக்குகளைப்; போன்றவையாகும்.
10. வாகனங்கள், கனரக பளுதூக்கும் இயந்திரங்கள்வாகனங்கள், கனரக
பளுதூக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றின் மதிப்பீட்டிற்கு ஸகாத் இல்லை. ஆனால்,
அவற்றின் வருமானத்திற்கும் வாடகைக்கும் ஸகாத் உண்டு.
பொதுவாகவே மேற்கூறிய அனைத்திற்கும் அவற்றின் மொத்த
மதிப்பீட்டிற்கு-அஸலுக்கு-( ஏயடரந ழக pசழிநசவல) ஸகாத் கிடையாது. அவற்றின்
வருமானத்திற்கும், அவற்றை விற்கும் போதும் தான் ஸகாத் கொடுக்க வேண்டும்
என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.
11. கால் நடைகள் கால் நடைகளில் ஆடு, மாடு, ஒட்டகை மனித வாழ்வுக்கும்
ஒரு நாட்டின் வளத்திற்கும் வருவாய்க்கும் மிகவும் முக்கியமானவையாக உள்ளன.
அவற்றின் பாலும் மாமிசமும் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவை. அதன்தோல்,
உரோமம், கொம்பு ஆகியவை பெருமளவில் அந்நியச்செலாவணியைப் பெற்றுத்தருகிறது.
பயணம் செய்வதற்கும் பயன்படுகின்றன. இவ்வாறாக மனிதத் தேவைகளுக்கும்
பொருளாதார
வளத்திற்கும் பயன்தரும் இந்த கால் நடைகளை சிறப்பித்து திருமறையில் வரும்
43:12, 16:5,7 வசனங்கள் சிந்தனைக்குரியதாகும், எனவே இறைவன் வழங்கிய இந்த
அருட்கொடைகளுக்கு ஸகாத் வழங்குவது கடமையாகும். நம் நாட்டைப் பொறுத்தவரை
ஸகாத் கொடுக்குமளவுக்கு யாரும் கால்நடைகள் வைத்திருப்பதில்லை.
எனினும் அதன் விபரத்தை சுருக்கமாகக் காண்போம்.
ஸகாத் விகிதங்கள் கால்நடைகள் எண்ணிக்கை ஸகாத் இல்லை ஸகாத் கொடுக்க வேண்டும்.
1. ஆடுகள்
1 முதல் 39 வரை ஸகாத் இல்லை
40 முதல் 120 வரை ஓராண்டு நிறைவு பெற்ற ஓர் ஆடு
121 முதல் 200 வரை ‘ ‘ இரண்டு ஆடுகள்
201 முதல் 399 வரை ‘ ‘ மூன்று ஆடுகள்
400, அதற்கு அதிகமுள்ளதற்கு ஒவ்வொரு 100 க்கும் ஒரு ஆடு அதிகம் வழங்கவேண்டும். (புகாரி ஹதீஸ் எண:;1454))
(வெள்ளாடு,செம்மரியாடு,ஆண்-பெண் ஆடுகள் யாவும் சமமாகும்)
2. மாடுகள்
1 முதல் 29 வரை ஸகாத் இல்லை (எருமைகள);
30 முதல் 39 வரை ——- ஓராண்டு நிறைவு பெற்ற ஒரு கன்று
40 முதல் 59 வரை ——- 2 வருடம் ‘ ‘ ஒரு கன்று
60
அல்லது அதற்குமேற்பட்டதற்கு ஓவ்வொரு 30 மாடுகளுக்கு ஓராண்டு நிறைவு பெற்ற
ஒரு கன்றும் ஓவ்வொரு 40 மாடுகளுக்கு இரண்டு ஆண்டு நிறைவு பெற்ற ஒரு கன்றும்
3. ஒட்டகைகள்
1 முதல் 4 வரை ஸகாத் இல்லை
5 முதல் 9 வரை ஓராண்டு நிறைவு பெற்ற ஓர் ஆடு
10 முதல் 14 வரை ஓராண்டு நிறைவு பெற்ற இரண்டு ஆடுகள் 15 முதல் 19 வரை ஓராண்டு நிறைவு பெற்ற மூன்று ஆடுகள்
20 முதல் 24 வரை ஓராண்டு நிறைவு பெற்ற நான்கு ஆடுகள்
25 முதல் 35 வரை ஓராண்டுநிறைவுபெற்ற ஓர் பெண் ஒட்டகம்;
36 முதல் 45 வரை இரு வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம்
46 முதல் 60 வரை 3 வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம்
61
முதல் 75 வரை 4 வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம
76 முதல் 90 வரை 2வருடம்நிறைவுபெற்ற 2 பெண் ஒட்டகங்கள்
91 முதல் 120 வரை 3 வருடம்நிறைவுபெற்ற2 பெண் ஒட்டகங்கள
ஒவ்வொரு 40 க்கும்ஒவ்வொரு 50 க்கும் 2 வருடம் நிறைவுபெற்ற 1 பெண் ஒட்டகம் 3 வருடம்நிறைவுபெற்ற 1 பெண்xட்டகம்
குதிரைக்குரிய ஸகாத் வியாபாரப்பொருளைப்போன்றதாகும். சொநத
உபயோகத்திற்கு ஸகாத் கிடையாது. வியாபாரத்திற்கு இரண்டரை சதவிகிதம் ஸகாத்
கொடுக்க வேண்டும்.
2) 5 சதவிகிதம் ஸகாத்
12. தானியங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தானியங்களில் கோதுமை மட்டுமே
விவசாயம் செய்யப்பட்டுவந்தன. வேறு தானியங்களும் அப்பகுதிகளில்
உற்பத்தியாகவுமில்லை. ஆயினும் நெல், சோளம், ரவை, ராகி கிழங்கு போன்ற உணவு
வகை எதுவாயினும் கோதுமையைப் போன்று கணக்கிட்டு ஸகாத் கொடுக்க
வேண்டும்.எனினும் முன்னர் நாம் குறிப்பிட்ட பொருள்களின் ஸகாத்திலிருந்து
இவை மாறுபடுகின்றன.
தங்கம் வெள்ளி வியாபாரப் பொருட்களுக்கு ஆண்டு தோறும் ஸகாத் கொடுத்து
வரவேண்டும். ஆனால் தானியங்களைப் பொறுத்தவரை அவ்வாறன்று. விவசாயம் செய்து
விளைந்து அறுவடை செய்யும் காலங்களில் அதற்குரியஸகாத்தை கணக்கி;ட்டுக்
கொடுக்க வேண்டும்.
3) 10 சதவிகிதம் ஸகாத்
(உற்பத்தியில் 5 சதவிகிதம்)
நீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்து விவசாயம் செய்திருந்தால்
உற்பத்தியில் 5 சதவிகிதம் ஸகாத்கொடுக்க வேண்டும். (அதாவது 20ல் ஒருபங்கு
(1ஃ20) கொடுக்க வேண்டும்.)
உற்பத்தியில் 10 சதவிகிதம் நீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்யப்படாமல்
விவசாயம் செய்திருந்தால் உற்பத்தியில் 10 சதவிகிதம் ஸகாத் கொடுக்க
வேண்டும். (அதாவது 20ல் இரு பங்கு (2/20) கொடுக்க வேண்டும்.) அறிவிப்பவர்:
இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி
ஓராண்டு முடிவடைய வேண்டும் என்பதில்லை.அறுவடையான உடனேயே கொடுத்து
விடவேண்டும் இங்கேகவனிக்கத்தக்கதாகும். அதற்குரிய உரிமையை அறுவடை நாளிலேயே
கொடுத்;து விடவேண்டும் என அல் குர்ஆன் (6:141) அறிவுரை பகர்கிறது.
தானியங்களுக்குரிய அளவு (நிஸாப்)
கோதுமைதானியங்களுக்கும் ஒரு வரையறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
நிர்ணயம் செய்;துள்ளார்கள்;.’ ஐந்து வஸக்’ அளவுக்குக் குறைவான உற்பத்திக்கு
ஸகாத் கிடையாது என நபி ( ஸல் )அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : அபூ
ஹுரைரா (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அபூ தாவூது, தீhமிதி,நஸயீ, இப்னு
மாஜா,தாரமீ, முஅத்தா, அஹ்மத்.
எனவே, ஒரு வஸக் என்பது 60 ஸாவு ஆகும் ஒரு ஸாவு 2.5 மப (இரண்டரை கிலோ) ஃ
5 வஸக் 5ஒ60ஸ்ரீ 300 ஸாவு 300 ஸாவு (300ஓ2.5 மப ஸ்ரீ) 750 கிலோவாகும் .
750 கிலோ கோதுமை உற்பத்திக்கே ஸகாத் வழங்கப்படவேண்டும். அதற்கு
குறைந்த அளவுக்கு ஸகாத்வேண்டியதில்லை. ஒரு வருடத்தில் பல முறை உற்பத்திச்
செய்தாலும் ஒவ்வொரு முறையும் இந்த அளவுவிளைச்சலுக்கு ஸகாத் கொடுக்க
வேண்டும்.
நெல் கோதுமையைப் பொறுத்த வரை அப்படியே அரைத்து மாவாக்கி உணவாக
உட்கொள்ள முடியும்..ஆனால் நெல்லைப் பொறுத்தவரை அதன் மேல் தோலான உமியை
நீக்கிய பிறகே உண்ணுவதற்கு ஏற்றதாகும். ஆகவே. நெல்லுக்கு ’10 வஸக்’ ( 1500
மப) உற்பத்தியானால் தான் அதற்கு ஸகாத் உண்டு என மார்க்கஅறிஞர்கள் நிர்ணயம்
செய்துள்ளனர். தண்ணீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்யப்பட்டிருந்தால்
உற்பத்தியில் 5
சதவிகிதமும் தண்ணீர் பாய்ச்சுவதற்காகசெலவு செய்யப்படாமலிருந்தால்
உற்பத்தியில் 10 சதவிகிதமும் ஸகாத் கொடுக்க வேண்டும்.
நிலத்திலிருந்து உற்பத்தி யாகும் பொருட்களுக்கு மட்டுமே ஸகாத் கடமையாகும். நிலம் எவ்வளவு இருந்தாலும்நிலத்திற்கு ஸகாத் கிடையாது.
13. பேரீத்தம் பழம் , உலர்ந்த திராட்சை இந்த இரண்டும் அறுவடை செய்த
உடனேயே ஸகாத் கொடுக்க வேண்டும். இவை தவிர எந்த பழவகைகளுக்கும் ஸகாத்
கிடையாது.
14. காய்கறிகள்காய்கறிகளுக்கும் ஸகாத் கிடையாது. அவை வியாபாரத்திற்கு
பயன்படுத்தப்படுமேயாhனால் அவற்றின் ஸகாத்காலமும் அளவும் நிறைவு பெற்றால்
ஆண்டுதோறும் ஸகாத் கொடுக்கவேண்டும்.
4) 20 சதவிகிதம் ஸகாத்
15. கனிமப் பொருள், சுரங்கப்பொருள்சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும்
உலோகங்கள், கனிமப் பொருட்கள், பூமியிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், கச்சா
எண்ணெய், நிலக்கரி போன்ற புதையல்கள், போரில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றும்
(கனீமத்) பொருட்கள் ஆகியவற்றிற்கு 20 சதவிகிதம் ஸகாத் வழங்ப்படவேண்டும்.
முக்கியக் குறிப்பு :
1. வைரக்கல், பிளாட்டினம் பல நர்டுக்கரன்சிகள், வலையுயர்ந்த
சேமிப்புப் பொருட்கள் ஆகிய ற்றிற்கு ஸகாத்கிடையாது. அவை
வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும் அதன் விலைக்கு இரண்டரை
சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
2. ஆடு, மாடு, ஒட்டகை அல்லாத மிருகங்களுக்கும் ,பறவைகளுக்கும் ஸகாத்
கிடையாது. விற்பனைக்கென்றால் ஓராண்டுநிறைவு பெற்றதும் வியாபாரப்
பொருளைப்போல் இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
3. பழவகைகள், காய் கறிகளுக்கும் ஸகாத் கிடையாது. அவை
வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும அதன்விலைக்கு இரண்டரை
சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
4. மேலே குறிப்பிடப்படாத எதுவாயினும் சொந்த உபயோகத்திற்கோ, பாது
காத்து வரும் எண்ணத்திலோஉள்ளவையாயின் ஸகாத் கிடையாது. அவை
வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும் அதன் விலைக்கு
இரண்டரைசதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
16. சில்லரையாக வினியோகித்தல்; சில்லரையாக வினியோகிப்பது ஸகாத் முறையாகாது. கடமையும் நிறை வேறாது.
17. பைத்துல் மால் பொது
நிதிபைத்துல் மால் பொது நிதி ஒன்றை உருவாக்கி பணத்தை உரியவரிடமிருந்து
திரட்டி ஒரு அமைப்பு முறையாக ஏழைகளுக்கு வாழ்வாதாரத்திற்குப்பயன் படும்
வகையில் அவர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்றவர்களுக்கு கொடுக்கும்
வகையில் வினியோகிப்பதையே இஸ்லாம் விரும்புகிறது.
இதன் மூலமே உலகளாவிய அளவில் வறுமையை ஒழித்து ஏழைகள் ஏற்றம் பெறச்
செய்து சமுதாயத்தில் வாழ்வையும் வளத்தையும் காணமுடியும். இதுவே இஸ்லாம்
விழையும் ஸகாத் முழறயாகும். வல்ல நாயன் ஸகாத்தின் முக்கியத்தை உணர்ந்து அதை
உரிய முறையில் வினியோகிப்பதற்கு நல்லருள் புரிவானாக.
நன்றி:இஸ்லாம் கல்வி