dailyvideo


புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஏபல் சேவியர் இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறினார்.


ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் பிறந்த இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கேலாக்ஸி, போர்ச்சுகல்,
இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா அணிக்காகவும் விளையாடியவர். மேலும் தன்னுடைய 38வது வயதில் கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுப்பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார். ஓய்வு பெறுவது வருத்தமாக இருந்தாலும் என்னுடைய வாழ்கையின் புதிய கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய பெயரை பைசல் சேவியர் என்று மாற்றியுள்ளார். இஸ்லாமிய மார்க்கமானது அமைதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் நம்பிக்கை அளிப்பதாகவும் இவைகள் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.தற்போது இவர் ஐ.நா.வின் சார்பில் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளார்.
      
இன்னும் இது போல் பலரும் தூய இஸ்லாமிய மார்கத்திற்கு திரும்பி உள்ளனர் ஆனால் இஸ்லாதிற்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் எல்லா மீடியாக்களும் வேண்டும் என்றே இந்த விசயங்களை மறைகின்றது மேலும் உண்மையற்ற மற்றும் ஆதாரமற்ற விசயங்களை திட்டமிட்டே பரப்பிவருகின்றது அதை இனம் கண்டு நாம் தெளிவடைவோம் இன்ஷா அல்லாஹ்.

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505