dailyvideo


ஸூரத்துல் அலஃக்


ஸூரத்துல் அலஃக்(இரத்தக்கட்டி)  
மக்கீ, வசனங்கள்: 19

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
96:1    اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
96:1(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
96:2   خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
96:2“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
96:3   اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
96:3ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
96:4   الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
96:4அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
96:5   عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
96:5மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
96:6   كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ
96:6எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
96:7   أَن رَّآهُ اسْتَغْنَىٰ
96:7அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
96:8   إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ
96:8நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
96:9   أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ
96:9தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
96:10   عَبْدًا إِذَا صَلَّىٰ
96:10ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
96:11   أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰ
96:11நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
96:12   أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ
96:12அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
96:13   أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ
96:13அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?
96:14   أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰ
96:14நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
96:15   كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ
96:15அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
96:16   نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ
96:16தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
96:17   فَلْيَدْعُ نَادِيَهُ
96:17ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
96:18   سَنَدْعُ الزَّبَانِيَةَ
96:18நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
96:19   كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩
96:19(அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505