dailyvideo


சிந்தனைக்கு சில கேள்விகள்! – திரித்துவம் பாகம் 2


பின்வருகின்ற கேள்விகளை கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டு பைபிளின் வசனங்களான இவற்றை தாம் எந்த அளவிற்கு கடைப்பிடிக்கிறோம் என்று சிந்தித்து தெளிவு பெற வேண்டுகிறோம். இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! மாறாக சகோதர கண்ணோட்த்துடன் சிந்திப்பவர்களின் சிந்தனையைத் தட்டியெழுப்புவதற்காகத் தான் என்பதை நினைவு கூறுகிறோம்.
1) இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு ஏற்ப நாம் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்களைப் பின்பற்றுகிறோமா?
நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்” (மத்தேயு 5:17-19)
2) இயேசு கிறிஸ்துவின் கூற்றுப்படி பழைய ஏற்பாட்டையும் பின்பற்ற வேண்டுமானால் அதன்படி ஏன் கிறிஸ்தவர்கள் விருத்த சேதனம் செய்து கொள்வதில்லை?
“எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்” (ஆதியாகமம் 17:10-11)
இயேசு கிறிஸ்துவுக்கும் விருத்த சேதனம் செய்திருந்தார்களே!
“பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்” (லூக்கா 2:21)
3) இயேசு கிறிஸ்துவின் கூற்றுப்படி பழைய ஏற்பாட்டையும் பின்பற்ற வேண்டுமானால் அதன்படி ஏன் கிறிஸ்தவர்கள் வட்டி வாங்காமல் இருப்பதில்லை?
நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக” (லேவியராகமம் 25:36-37)
தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை” (சங்கீதம் 15:5)
4) இயேசு கிறிஸ்துவின் கூற்றுப்படி பழைய ஏற்பாட்டையும் பின்பற்ற வேண்டுமானால் அதன்படி ஏன் கிறிஸ்தவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடாமல் இருப்பதில்லை! ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் பாதிரிமார்கள் கூட இருக்கிறார்களே!
“அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, அந்தப் பட்டணங்களையும், அந்தச் சம பூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்” (ஆதியாகமம் 19:24-25)
5) கிறிஸ்துமஸ் மரம் வைத்து கொண்டாடுவது புறஜாதிகளின் மார்க்கத்தைச் சேர்ந்தது என்று பைபிள் கூறுகையில் அதை யாரும் ஏன் பின்பற்றுவதில்லை?
“புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள். ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது;காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள்” (எரேமியா 10:2-4)
6) இயேசு கிறிஸ்துவின் கூற்றுப்படி பழைய ஏற்பாட்டையும் பின்பற்ற வேண்டுமானால் அதன்படி ஏன் கிறிஸ்தவர்கள் பைபிளின் பத்து கட்டளைகளின்ப்படி போதனை செய்வதில்லை?
பழைய ஏற்பாட்டில் உள்ள தீர்க்கதரிசிகளின் சட்டங்களை போதிப்பவரே பரலோகத்தில் பெரியவராக இருப்பார் என்றும் அதை மீறுபவர் சிறிவராயிருப்பார் என்றும் மத்தேயு 5:19 கூறுகிறதே!
“ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்” (மத்தேயு 5:19)
தேவன் ஒருவரே என்று கூறப்பட்டிருக்க தேவன் மூவரில் இருக்கிறார் என்று ஏன் போதிக்கின்றனர்?
“இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள்,நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (மாற்கு 12:29)
7) சிலை மற்றும் உருவ வழிபாடுகளை தேவன் கண்டித்திருக்க இயேசு மற்றும் மரியாளின் உருவங்களை ஏன் கிறிஸ்தவர்கள் வழிபடுகின்றனர்?
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்” (யாத்திராகமம் 20:4-5)
8.) இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று இயேசு கட்டளையிட்டிருக்க இயேசுவையே ஏன் கிறிஸ்தவர்கள் வணங்குகின்றனர்?
“அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்” (மத்தேயு 4:10)
9) உண்மையான கிறிஸ்தவர்கள் இறைவனை மட்டுமே தொழ வேண்டும் என பைபிள் கட்டளையிட்டிருக்க இறைவனை விட்டுவிட்டு இயேசுவையே தொழ காரணம் என்ன?
“உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்” (யோவான் 4:23-24)
10) இயேசு கடவுளா? அப்படியென்றால் பைபிளில் இறைவனை யாரும் பார்க்கமுடியாது என்றும் அவருடைய சத்தத்தையும் கேட்க முடியாது என்றும் கூறப்பட்டிருக்க இயேசுவைப் பலர் பார்த்திருக்கிறார்களே! மேலும் பலர் அவருடைய உரையையும் கேட்டிருக்கிறார்களே!
“என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை” (யோவான் 5:37)
“நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” (யோவான் 14:28)
11) இயேசு தேவ குமாரனா? பைபிளின் பின்வரும் வசனங்கள் இதற்கு மாற்றமாக அல்லவா கூறுகிறது?
மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன்தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மத்தேயு 16:27-28)
“இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்” (லூக்கா 22:48)
இயேசு மட்டுமா தேவகுமாரன்?
“மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” (ரோமர் 8:14)
12) உங்கள் பாவங்களை மன்னிப்பவர் யார்? இயேசுவா? அல்லது இறைவனா? நீங்கள் பிரார்த்திக்க வேண்டியது இயேசுவையா? அல்லது இறைவனையா?
“நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டா யிருக்குமானால்,பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்” (மாற்கு 11:25-26)
“அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும் போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக; எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்; எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், என்று சொல்லுங்கள் என்றார்” (லூக்கா 11:2-4)
13) இயேசுவின் போதனைகள் யூதர்களுக்கு மட்டுமா? அல்லது உலக மனிதர்கள் அனைவருக்குமா? மத்தேயு 15:24 இயேசுவின் வருகை யூதர்களுக்காகத் தான் என்று கூறுகிறதே!
“அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லஎன்றார்” (மத்தேயு 15:24)
14) லூக்கா சுவிசேஷங்களை எழுதியது புனித ஆவியின் தூண்டுதலினாலா? அல்லது அவராகவே எழுதினாரா?
“மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று” (லூக்கா 1:1-3)
15) மாற்கும் லூக்காவும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் உள்ளவர்களா?
“அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே” (மத்தேயு 10:2-4)
16) நீங்கள் இரட்சிக்கப்படுவது உங்கள் செயல்களினாலா? அல்லது இறைவனின் கிருபையினாலா?
“கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” (எபேசியர் 2:8-9)
17) கிறிஸ்தவர்கள் கூறுவது போன்று இயேசுவை விசுவாசித்து இறைவனின் கட்டளைகளைப் பின்பற்றாமலேயே நித்திய ஜீவ வாழ்வாகிய பரலோகத்தின் சுபிட்சத்தை அடையமுடியுமா? இறைவனின் கட்டளைகளை கைக்கொள்வதினால் மட்டுமே பரலோக நித்திய ஜீவவாழ்வை அடைய முடியும் என்று பைபிள் கூறுகிறதே!
“அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்” (மத்தேயு 19:16-17)
“அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். அவர் அவனை நேரக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்” (லூக்கா 10:25-28)
18) திரித்துவக் கூற்றுப்படி இயேசு தான் இறைவனென்றால் அவர் அவர் ஏன் பிதாவிடத்தில் பிரார்த்தித்தார்?
“பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்” (லூக்கா 22:42)
“அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். (மத்தேயு 11:25)
19) ஒருவர் பாவச் சுமையை பிறிதொருவர் சுமக்க முடியாது என்று பைபிள் கூறும் போது மனிதர்களின் பாவச் சுமையை எப்படி இயேசு சுமப்பார்?
“பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்” (உபாகமம் 24:16)
20) இயேசு கிறிஸ்து சுயமாக ஒன்றும் செய்யவில்லை என்றும் அனைத்தும் பிதவினாலேயே நடக்கின்றன என்றும் இயேசுவே கூறியிருக்க அனைத்தும் இயேசுவின் நாமத்திலே நடக்கின்றன என்று எப்படிக் கூறமுடியும்?
“ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்” (யோவான் 8:28)
“இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத்தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்” (அப்போஸ்தலர் 2:22)
“இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்” (ரோமர் 7:6)
“நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 5:17-18)
“நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது” (யோவான் 5:30)
21) இயேசு தந்தையின்றிப் பிறந்திருக்க அவருக்கு இரண்டு விதமான வம்சாவழியினரைக் குறிப்பிடுவது எதற்காக?
மத்தேயு 1:6-16 – 26 வம்சாவழியினர்
லூக்கா 3:23-31 – 41 வம்சாவழியினர்
22) இயேசு பயன்படுத்திய வாழ்த்து (முகமன்) எது?
“இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்” (லூக்கா 24:36)
முஸ்லிம்கள் கூறுகின்ற முகமன் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பதற்கும் அதே பொருள் தான். அதாவது ‘உங்களுக்குச் சமாதானம்’ என்பதாகும்.
23) இயேசு தேவனை எவ்வாறு வழிபட்டார்?
“சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்” (மத்தேயு 26:39)
“அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும், அவன்முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்” (I கொரிந்தியர் 14:25)
முஸ்லிம்களும் தங்களின் தொழுகையின் போது இவ்வாறே சஜ்தா என்ற சிரவணக்கம் செய்கின்றனர்.
24) கிறிஸ்தவர்கள் உண்ணா நோன்பிருக்க வேண்டும் என பைபிள் கட்டளையிட்டிருக்க கிறிஸ்தவர்கள் ஏன் இதைக் கடைப்பிடிப்பதில்லை?
“அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்” (மத்தேயு 9:14-15)
“அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று” (மத்தேயு 4:2)
25) மது அருந்துவதை பைபிள் தடை செய்திருக்க கிறிஸ்தவர்களில் அநேகர் மது அருந்துவதேன்?
“அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்” (லூக்கா 1:15)
“மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்” (ரோமர் 14:21)
26) பன்றியின் மாமிசத்தை பைபிள் தடை செய்திருக்க கிறிஸ்தவர்கள் பன்றியின் மாமிசத்தை சாப்பிடுவதேன்?
பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது” (லேவியராகமம் 11:7-8)
இறைவன் எண்ணற்ற படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பினமாக மனித இனத்தைப் படைத்து அவர்களுக்கு வாழ்வியல் முறையை பயிற்றுவிக்க பல தீர்க்கதரிசிகளையும் அனுப்பி வைத்தான். இறைவனின் வேதவாக்கைப் பெற்ற அந்த தீர்க்கதரிசிகள் மனிதர்களுக்கு தேவையான வாழ்வியல் நெறிமுறைகளையும் ஒரே இறைவனை வணங்க வேண்டுமென்ற இறை கட்டளையையும் போதித்து வந்தார்கள். ஒவ்வொரு தீர்க்கதரிசிக்கும் இடையில் மனிதர்கள் வழி தவறும் போதெல்லாம் புதிய தீர்க்கதரிசிகளை இறைவன் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தான். அந்த வகையில் நோவா, ஆப்ரஹாம், பாக்கோபு, ஜோசப், மோஸஸ் போன்ற தீர்க்கதரிசிகளின் வரிசையில் வந்தவர் தான் இயேசு கிறிஸ்து ஆவார்.
இயேசு நாதரின் சீடர்களும் மற்றும் அவரைப் பின்பற்றியவர்களும் அவர் போதித்த தூய ஒர் இறைக் கொள்கையைத் தான் பின்பற்றினர். இவ்வாறு இந்த ஒர் இறைக்கொள்கையே கிறிஸ்தவக் கொள்கையாக ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள் பின்பற்றி வந்தனர். ஆனால் பின்னர் வந்த பவுல் அடியார் அவர்களே இயேசு கிறிஸ்துவின் உண்மையான போதனைகளுக்கு மாற்றமாக தம்முடைய கருத்துக்களை கிறிஸ்தவ மதத்தில் தோற்றுவித்து அவற்றை கிறிஸ்தவ மார்க்கமாக்கினார். மேலும் இயேசு கிறிஸ்து பிறப்பிற்கு 329 ஆண்டுகளுக்கு பிறகே எகிப்து நாட்டின் அலெக்ஸ்ஸாண்டரியா நகரைச் சேர்ந்த அதானாசியஸ் என்பவரால் கிறிஸ்தவர்கள் தற்போது பின்பற்றுகின்ற முக்கடவுள் கொள்கையான திரித்துவக் கொள்கை உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. இந்த திரித்துவக் கொள்கைக்கும் இயேசுநாதர் இறைவனிடமிருந்து பெற்று தன் சீடர்களுக்கு போதித்த உண்மையான கிறிஸ்துவக் கொள்கைக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை.

0 comments for சிந்தனைக்கு சில கேள்விகள்! – திரித்துவம் பாகம் 2

கருத்துரையிடுக

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505